மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 3 ஜூலை 2020

நெறிப்படுத்தப்படாத முதலாளித்துவத்தின் விளைவுகள்!

நெறிப்படுத்தப்படாத முதலாளித்துவத்தின் விளைவுகள்!

21ஆம் நூற்றாண்டில் இந்தியப் பொருளாதாரத்தை ஆட்டிப்படைக்கும் சக்திகளாக நாம் மூன்றைக் குறிப்பிடலாம்: மூலதனத்தை மையப்படுத்திய பொருளாதார வளர்ச்சி, பெருமுதலாளிகள்-அரசியல்வாதிகளுக்கு பரஸ்பர ஆதாயங்கள் ஈட்டித்தரும் முதலாளித்துவம் (crony capitalism) மற்றும் தொடர்ந்து அதிகரித்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்.

ஒருபுறம் பெரும்பான்மை மக்களின் தனிப்பட்ட பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருக்க, மறுபுறம் உற்பத்தித்திறன் வளர்ச்சியின் ஆதாயங்கள் தொழிலாளர்களுக்கு செல்லாமல், மூலதனத்திற்குச் சொந்தக்காரர்களான முதலாளிகளிடமே சென்று குவிகிறது.

பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை முதலாளித்துவத்துவம் அதிகரிக்கிறது. அதன் விளைவாக அரசியல், பொருளாதாரம், ஊடகம் என பல்வேறு துறைகளில் அதிகாரம் படைத்தவர்கள் நாட்டின் கொள்கைகளைத் தங்களுக்குச் சாதகமாக வடிவமைக்கும் போக்கையே நாம் காண்கிறோம். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இந்தியாவின் வரிக் கொள்கை திகழ்கிறது. பெரும் செல்வந்தர்களுக்கும் அவர்கள் நடத்தும் நிறுவனங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையிலேயே தாராளமாக வரிச்சலுகைகள் அளிக்கப்படுகின்றன. அச்சலுகைகளை அட்டவணையில் பார்ப்போம்.

2000-2013 காலத்தில் நடைபெற்ற 28 ஊழல் விவகாரங்கள் பற்றிய பட்டியல் ஒன்றைத் தயாரித்த சுக்தாங்கர் மற்றும் வைஷ்ணவ் எனும் இரண்டு அரசியல் பொருளாதார ஆராய்ச்சியாளர்கள், இந்த ஊழல்கள் ஒவ்வொன்றின் சராசரி மதிப்பும் ரூ. 36,000 கோடி என்று கணக்கிடுகிறார்கள். நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்கீடு, காமன்வெல்த் போட்டிக்கான கட்டமைப்பை உருவாக்க தனியாருக்கு அளிக்கப்பட்ட ஒப்பந்தங்கள், ராணுவத் தளவாடங்கள் கொள்முதல் ஆகிய அனைத்திலும் இருந்த முறைகேடுகள், அரசியல்வாதி-பெருமுதலாளி இடையே நிலவும் நெருக்கமான உறவின் விளைவுகளே.

அபரிமிதமான சொத்துக்குவிப்பு, உழைக்கும் மக்களைச் சுரண்டும் உற்பத்தி உறவுகள், இயற்கை வளங்களைச் சுரண்டுவது, பொருளாதாரத்தை ஊகவணிகச் சந்தையாக மாற்றுவது, ஜனநாயகத்தைப் பலவீனமாக்குவது, சுயநலம் மற்றும் லாபநோக்கை மட்டுமே முன்னிறுத்துவது என இந்திய முதலாளித்துவத்தின் சீர்கேடுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

புதன், 24 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon