மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 3 ஜூலை 2020

வாட்சப்பில் மார்பிங் படம்: காஞ்சனா 3 நடிகை புகார்!

வாட்சப்பில் மார்பிங் படம்: காஞ்சனா 3 நடிகை புகார்!

காஞ்சனா 3 படத்தில் நடித்த ரி ஜாவி அலெக்ஸாண்டர் தனக்கு பாலியல் தொந்தரவளித்த நடிகர் மீது புகார் அளித்துள்ளார்.

ஏப்ரல் 19 அன்று வெளியான ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஓவியா, வேதிகா, நிக்கி டம்போலி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

இந்நிலையில் படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் வரும் காளி (ராகவா லாரன்ஸ் ) கதாபாத்தித்தின் ஜோடியாக வரும் ரோஸியாக நடித்தவர் ரஷ்யா நாட்டைச் சேர்ந்த ரி ஜாவி அலெக்ஸாண்டர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக கணவர் மற்றும் குழந்தையுடன் சென்னையிலுள்ள எம்.ஆர்.சி.நகரில் வசித்து வருகிறார்.

ஓரிரு நாட்களுக்கு முன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாலியல் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ‘நடிகர் ரூபேஷ் குமார் என்பவர் விளம்பர படத்தில் நடிக்க வைப்பதாகக் கூறி என்னை புகைப்படம் எடுத்தார். பின்னர் அதை மார்பிங் செய்து வாட்சப்பில் அனுப்பி தன் விருப்பப்படி நடந்துகொள், இல்லாவிட்டால் இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டினார். ஒருகட்டத்தில் எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். அதனால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் நேற்று முன்தினம் நடிகர் ரூபேஷ்குமாரை, சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

புதன், 24 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon