மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 3 ஜூலை 2020

வேட்பாளர்களை அறிவித்த நாம் தமிழர்!

வேட்பாளர்களை அறிவித்த நாம் தமிழர்!

4 சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது நாம் தமிழர் கட்சி.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வரும் மே 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. முக்கிய கட்சிகளான அதிமுக, திமுக, அமமுக ஆகியவை வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை துவங்கிவிட்டன. வரும் 1ஆம் தேதி முதல் தலைவர்கள் நான்கு தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள்.

.

இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் போலவே 4 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது நாம் தமிழர் கட்சி. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (ஏப்ரல் 24) வெளியிட்டுள்ள அறிவிப்பில், சூலூர் தொகுதியில் வழக்கறிஞர் விஜயராகவன் போட்டியிடுவார் என்றும், அரவக்குறிச்சி தொகுதியில் பா.க.செல்வமும், திருப்பரங்குன்றத்தில் இரா.ரேவதியும் ஓட்டப்பிடாரம் தொகுதியில் மு.அகல்யாவும் விவசாயி சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள் பட்டியலில் 50 சதவிகிதம் பெண் வேட்பாளர்களை அறிவித்திருந்தார் சீமான். அதுபோலவே தற்போது நடைபெறவுள்ள 4 தொகுதிகளுக்கும் 2 ஆண், 2 பெண் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளார்.

புதன், 24 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon