மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 3 ஜூலை 2020

ஒபாமா உங்களுக்காக: அடுத்த அரசியல் காமெடி!

ஒபாமா உங்களுக்காக: அடுத்த அரசியல் காமெடி!

தமிழில் அரசியல் காமெடி ஜானர் புதிதல்ல. இந்த வருடம் ஆர்.ஜே. பாலாஜி நடித்த எல்.கே.ஜி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஒபாமா உங்களுக்காக என்ற மற்றொரு படம் இதே ஜானரில் உருவாகிவருகிறது.

நகைச்சுவை நடிகர் ஜனகராஜ், ஒபாமா உங்களுக்காக படத்தில் பிருத்வி பாண்டியராஜனுடன் இணைந்து நடிக்கிறார். பூர்ணிஷா நாயகியாக அறிமுகமாகிறார். விக்ரமன், கே.எஸ். ரவிகுமார், ரமேஷ் கண்ணா, தளபதி தினேஷ், செம்புலி ஜெகன் ஆகியோரும் படத்தில் நடிகின்றனர்.

பாஸ்மார்க் படத்தை இயக்கிய பாலகிருஷ்ணன் தனது பெயரை ‘நாநி பாலா’ என மாற்றிக்கொண்டு இப்படத்தை இயக்கியிருக்கிறார். “சென்னையிலிருக்கும் இரண்டு கேப் டிரைவர்களை சுற்றி நிகழும் கதை. மினிஸ்டரின் மகள் அவர்களது வாழ்வில் நுழையும் போது ஏற்படும் மாற்றங்களே கதை. ஜனகராஜ் டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்தால் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடையும். ஜனகராஜை எனக்கு நீண்ட நாட்களாகவே தெரியும். இந்தப் படத்திற்காக ஒரு சில நாட்கள் ஒதுக்க வேண்டும் என்று நான் கேட்டேன். ஆனால் அவர் இருபது நாட்களுக்கு ஷூட்டிங் செய்ய ஒத்துழைப்பு கொடுத்தார்.” என டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் ‘நாநி பாலா’ கூறியுள்ளார்.

“இன்றையக் காலகட்டத்தில் ஆன்ட்ராய்ட் போன்களில் பார்க்க முடியாததோ, சாதிக்க முடியாததோ எதுவுமில்லை. திரைக்கதையில் செல்போன் ஒன்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அரசியலைக் குறித்து நார் நாராக தொங்கவிடும் படமாக இது இருக்கும்” என மேலும் தெரிவித்தார்.

வைரமுத்து பாடல்களை எழுத ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். தினேஷ் ஸ்ரீநிவாஸ் ஒளிப்பதிவு, பி லெனின் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஜே.பி.ஜே பிலிம்ஸ் எஸ்.ஜெயசீலன் இப்படத்தை தயாரிக்கிறார்.

புதன், 24 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon