மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 3 ஜூலை 2020

ஆண்ட்ரியாவுக்கு ஊக்கமளித்த ஐஸ்வர்யா

ஆண்ட்ரியாவுக்கு ஊக்கமளித்த ஐஸ்வர்யா

வெற்றிமாறனின் வட சென்னை படத்தின் சந்திரா கதாபாத்திரம் மூலம் திரையுலகில் தனக்கான இடத்தை மீண்டும் நிரூபித்த ஆண்ட்ரியா அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து கமிட்டாகி வருகிறார்.

நேற்று (ஏப்ரல் 23) அகர்வால் கண் மருத்துவமனை தனது புதிய கிளையை திருப்பூரில் தொடங்கியுள்ளது. அதன் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகை ஆண்ட்ரியா அழைக்கப்பட்டிருந்தார். திறப்பு விழாவுக்குப் பின் செய்தியாளர்களிடம் உரையாடிய ஆண்ட்ரியா, அகர்வால் கண் மருத்துவமனைக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். “கண் சிகிச்சை வசதிகள் இந்தியாவின் மூலை முடுக்குகள் வரை பரவவேண்டும். அதன் மூலம்தான் பார்வையற்றோர் இழந்த தங்கள் பார்வையை மீண்டும் பெற முடியும்” என்றார்.

மேலும், “கண் தானம் தொடர்பான விழிப்புணர்வு அனைவருக்கும் இருக்க வேண்டும். நானும் எனது கண்களை தானம் செய்துள்ளேன். எனது கண் தானத்திற்கான உத்வேகம் வேறு யாருமல்ல, உலக அழகி ஐஸ்வர்யா ராய் தான்” என தெரிவித்தார்.

தற்போது ஆண்ட்ரியா மாளிகை, கா என இரண்டு படங்களிலும் மெயின் ரோலில் நடித்து வருகிறார்.

புதன், 24 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon