மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

மாதவனுக்கு நன்றி சொன்ன சாம் சி.எஸ்.

மாதவனுக்கு நன்றி சொன்ன சாம் சி.எஸ்.

மாதவனின் ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’ படத்தில் இசையமைக்கும் சாம் சி.எஸ்., அதன் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றிய விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’ படம் தயாராகி வருகிறது. நடிகர் மாதவன் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், ஆனந்த் மகாதேவனுடன் இணைந்து மாதவன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிறது.

விக்ரம் வேதா படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலம் கவனம் ஈர்த்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். மாதவனுடன் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படம் இதுவாகும்.

‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’ திரைப்படத்தில்தான் பணியாற்றிய அனுபவத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் சாம்.சி.எஸ். பகிர்ந்துள்ளார், “ராக்கெட்ரி போன்ற படத்திற்கு நான் இசையமைப்பேன் என எதிர்பார்க்கவேயில்லை. என் மனதுக்கும் உணர்வுகளுக்கும் மிக நெருக்கமான படம் இது. விரிவான தளத்தில் ஒரு நிஜ வாழ்க்கைக் கதை. ஒரு பெரிய படத்துக்குப் பங்களித்தது ஆசீர்வாதம் தான். ஒரு காவியத்தை இயக்கி, என்னையும் அதில் பங்கெடுக்க வைத்ததற்கு மாதவனுக்கு மிகப் பெரிய நன்றி. ஒவ்வொரு பிரேமும் கலை நயத்துடன் இருக்கிறது. அனுபவித்து வேலை செய்து கொண்டிருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

படத்தில் கதாநாயகியாக சிம்ரன் நடிக்கிறார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு சதிஷ் சூர்யா. ட்ரைகலர் பிலிம்ஸ், வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் சாப்ரான் கணேஷா நிறுவனங்கள் இந்த பயோபிக்கை இணைந்து தயாரிக்கின்றன.

புதன், 24 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon