மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020

விஜய் படத்தில் இணையும் ‘96’ நடிகை!

விஜய் படத்தில் இணையும் ‘96’ நடிகை!

விஜய் நடிக்கும் புதிய படத்தில் மற்றொரு இளம் நடிகை இணைந்துள்ளார்.

அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மகளிர் கால்பந்து போட்டியை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். இதனால் கால்பந்து வீராங்கனைகளாக இளம் நடிகைகள் பலர் படத்தில் இணைந்து வருகின்றனர். ஏற்கெனவே இந்துஜா , ரெபா மோனிக்கா ஜான் ஆகியோர் நடித்துவரும் நிலையில் தற்போது 96 படத்தில் புகைப்பட மாணவியாக நடித்த வர்ஷா பொல்லம்மா இணைந்துள்ளார்.

சென்னையைச் சுற்றி படத்தின் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. தற்போது ஈவிபி ஃபிலிம் சிட்டியில் பெரிய அரங்கு அமைத்துப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 29ஆம் தேதி வரை சென்னையில் படப்பிடிப்பை நடத்தும் படக்குழு அதன்பின் டெல்லி செல்லவுள்ளது. டெல்லியில் மே 3ஆம் தேதி முதல் படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க கதிர், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன்.எல்.அந்தோணி படத்தொகுப்பு செய்கிறார். தீபாவளியை முன்னிட்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

நயன்தாரா தற்போது தர்பார் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்துவரும் நிலையில் விரைவில் அவர் இந்தப் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதன், 24 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon