மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஏப் 2019

கிச்சன் கீர்த்தனா: கார்ன் சாலட்

கிச்சன் கீர்த்தனா: கார்ன் சாலட்

இரும்புச் சத்து தரும் சாலட்

வட்டவட்டமாக வெட்டிய கேரட், சின்னச் சின்னதாக நறுக்கிய பீன்ஸ், வெட்டிவைத்த வெங்காயம், அரிந்துவைத்த முட்டைகோஸ் இவற்றை வேகவைத்து, தேங்காய், மிளகாய் அரைத்துக் கொட்டித் தாளித்தால் ‘கூட்டு’; அரைத்துவிடாமல் காய்கறிகளை மட்டும் எண்ணெய் சேர்த்து வதக்கினால் ‘பொரியல்’; வேகவும் வைக்காமல் வதக்கவும் செய்யாமல் அப்படியே பச்சையாக ஒரு கிண்ணத்தில் அடுக்கி, மேலே கொஞ்சம் எலுமிச்சைச் சாறு பிழிந்து, கொஞ்சம் உப்பு, மிளகுத் தூள் தூவி கலந்துவைத்தால் ‘சாலட்’. தமிழ்ப்படுத்தினால் ‘காய்கறிக் கலவை’.

என்ன தேவை?

வெங்காயம் - ஒன்று (தோலுரித்துப் பொடியாக நறுக்கவும்)

கேரட், வெள்ளரிக்காய் – தலா ஒன்று (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்)

தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

வேகவைத்த ஸ்வீட் கார்ன் முத்துகள் – கால் கப்

கொத்தமல்லித் தழை, மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கொடுக்கப்பட்டுள்ள பொருள்கள் அனைத்தையும் அகலமான பாத்திரத்தில் ஒன்றாகச் சேர்த்துக் கலந்து இரும்புச் சத்துமிக்க இந்த சாலட்டைப் பரிமாறவும்.

என்ன பலன்?

செய்ய சுலபமாகவும் இருக்க வேண்டும்; அதேசமயம் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் இந்த சாலட். கார்னில் அதிகப்படியான நார்ச்சத்து இருப்பதால் ஜீரணத்துக்குப் பெரிதும் உதவும். ரத்தம் மற்றும் சருமங்களில் உள்ள நச்சுகளை நீக்கி சரும பொலிவுக்கு உறுதுணை புரியும்.

நேற்றைய ரெசிப்பி: அவல் சாலட்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

காவலருடன் வாக்குவாதம்: வழக்கறிஞர் விரைவில் கைது!

4 நிமிட வாசிப்பு

காவலருடன் வாக்குவாதம்: வழக்கறிஞர் விரைவில் கைது!

புதன் 24 ஏப் 2019