மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஏப் 2019

ஐபிஎல்: வாகை சூடவைத்த வாட்ஸன்

ஐபிஎல்: வாகை சூடவைத்த வாட்ஸன்

சென்னை அணி அடுத்தடுத்து இரு போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் சிறு சரிவைச் சந்தித்த நிலையில் நேற்று (ஏப்ரல் 23) நடைபெற்ற ஆட்டத்தின் மூலம் மீண்டும் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

சென்னையில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

ஹைதராபாத் அணியில் டேவிட் வார்னரும் ஜானி பர்ஸ்டவ்வும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். 2 பந்துகளை எதிர்கொண்டிருந்த பர்ஸ்டவ் ஹர்பஜன் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்துவிட்டு ரன் ஏதும் அடிக்காமல் வெளியேறினார். வார்னருடன் மனிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். இருவரும் சென்னை அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். 45 பந்துகளில் 57 ரன்கள் குவித்த வர்னர், ஹர்பஜன் வீசிய பந்தில் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து 4ஆவது வீரராக விஜய் சங்கர் களமிறங்கினார். 20 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

கடைசி நேரத்தில் களம் கண்ட யூசுஃப் பதான் 4 பந்துகளில் 5 ரன்கள் அடித்த நிலையில் அந்த 20 ஓவர்கள் முடிவில் 175 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஹர்பஜன், வார்னர் விக்கெட்டைக் கைப்பற்ற இன்னும் சற்று தாமதமாகியிருந்தால் ஹைதராபாத் அணியின் ஸ்கோர் மேலும் அதிகரித்திருக்கக்கூடும்.

176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. டு ப்ளஸிஸ் எதிர்பாராத விதமாக ஒரு ரன்னில் வெளியேற வாட்ஸன், ரெய்னா இருவரும் அதிரடியில் ஈடுபட்டனர். இதனால் முதலில் குறைந்திருந்த ரன் ரேட் பின்னர் வேகமாக உயர்ந்தது. 38 ரன்களில் ரெய்னா ஆட்டமிழந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வாட்ஸன் 53 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவர் 9 பவுண்டரிகளையும், 6 சிக்ஸர்களையும் பறக்க விட்டார். இதனால் ஆட்டம் சென்னை அணிப் பக்கம் எளிதில் மாறியது.

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

காவலருடன் வாக்குவாதம்: வழக்கறிஞர் விரைவில் கைது!

4 நிமிட வாசிப்பு

காவலருடன் வாக்குவாதம்: வழக்கறிஞர் விரைவில் கைது!

புதன் 24 ஏப் 2019