மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020

சத்யராஜ் மகளாக நடிக்கும் ‘தடம்’ நாயகி!

சத்யராஜ் மகளாக நடிக்கும் ‘தடம்’ நாயகி!

தடம் படத்தில் அறிமுகமான ஸ்மிருதி வெங்கட், சத்யராஜ் நடிக்கும் தீர்ப்புகள் விற்கப்படும் படத்தில் அவருக்கு மகளாக நடிக்கிறார்.

அறிமுக இயக்குநர் தீரன் இயக்கத்தில் உருவாகும் தீர்ப்புகள் விற்கப்படும் படத்தில் நடிகர் சத்யராஜ் ஹீரோவாக நடிக்கிறார். மகளுக்கு நடந்த அநீதியைத் தட்டிக் கேட்கும் அப்பாவின் கதையான இதில் மகளாக ஸ்மிருதி வெங்கட் நடித்து வருகிறார். தடம் படத்தில் இரண்டாவது நாயகியாக வரும் இவரது நடிப்பைப் பார்த்து இயக்குநர் தீரன் தேர்வு செய்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

“எனது கதாபாத்திரத்தின் பெயர் பாரதி. மருத்துவக் கல்லூரி மாணவியான நான், அப்பாவைப் போலவே மருத்துவராக வேண்டுமென்ற ஆசையிலிருப்பவள். அப்பா மீது பாசமாகவும், தைரியமும், சுதந்திர குணமுள்ள பெண் கதாபாத்திரம். இன்றுள்ள இளம் பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய ரோல் இது” எனத் தெரிவித்தார்.

மேலும், “நடிகர் சத்யராஜ் இயல்பாகப் பழகக்கூடியவர், அதனால் புது நடிகை என்ற பயமின்றி நடிக்க முடிகிறது. அனுபவமிக்க அவரிடமிருந்து நிறைய கற்றுவருகிறேன்” என கூறியுள்ளார்.

“சமுதாயத்தின் மீது ஒரு தனிமனிதனுக்கு இருக்கும் ஆதங்கத்தை வெளிப்படுத்திய வெட்னஸ்டே பட பாணியில் உருவாகும் திரைப்படம் இது” எனப் படப்பிடிப்பு தொடங்கும் சமயத்திலேயே இயக்குநர் தீரன் குறிப்பிட்டிருந்தார்.

படத்தை ஹனிபீ கிரியேஷன்ஸ் சார்பில் சாஜீவ் மீரா சாஹிப் ராவுத்தர் தயாரிக்கிறார்.

செவ்வாய், 23 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon