மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 4 ஜூலை 2020

சிவப்பு மஞ்சள் பச்சை: ஷங்கர் வெளியிட்ட போஸ்டர்!

சிவப்பு மஞ்சள் பச்சை: ஷங்கர் வெளியிட்ட போஸ்டர்!

பிச்சைக்காரன் படத்துக்குப் பிறகு சசி இயக்கும் புதிய படத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடிக்கிறார்கள். அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (ஏப்ரல் 17) வெளியாகியுள்ளது.

தமிழில் இரட்டை ஹீரோக்கள் கதை என்பது அபூர்வமாகத்தான் நிகழும். ஒரே படத்தில் ஹீரோ வில்லனாக இரண்டு கதாநாயகர்கள் நடித்தாலும், சரிசமமான பாத்திரமேற்று நடிப்பது அத்தி பூத்தது போல தான் அமைகிறது. அந்த வகையில் இயக்குநர் சசி இயக்கத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகிவரும் படம் சிவப்பு மஞ்சள் பச்சை. இந்தப் படத்தில், சித்தார்த் ஒரு டிராபிக் போலீஸ் அதிகாரியாக நடித்து வருவதாகவும், ஜி.வி.பிரகாஷ் ஒரு பைக் ரேஸர் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் ஏற்கனவே தகவல் வெளியாகின. அதோடு, ஜி.வி.பிரகாஷின் சகோதரியை சித்தார்த் காதலிப்பது போன்று இந்தப் படத்தின் கதை செல்வதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவந்த படப்பிடிப்பு சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் ஷங்கர் நேற்று வெளியிட்டுள்ளார்.

அபிஷேக் பிக்சர்ஸ் சார்பாக ரமேஷ் பி பிள்ளை தயாரிக்கும் இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழன், 18 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon