மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 ஏப் 2019

மாயாவதி முறையீடு நிராகரிப்பு!

மாயாவதி முறையீடு நிராகரிப்பு!

தேர்தல் பிரச்சாரம் செய்ய விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான மாயாவதி முறையீட்டை உச்ச நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 16) நிராகரித்துள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது சாதி, மதத்தைத் தூண்டி விடும் வகையில் வாக்கு சேகரிக்க நினைக்கும் வேட்பாளர்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதற்கிடையில் உபியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் மத ரீதியாகத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து யோகி ஆதித்யநாத்துக்கு 72 மணி நேரமும் , மாயாவதிக்கு 48 மணி நேரமும் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இந்தியத் தேர்தல் ஆணையம் தடை விதித்தது. பத்திரிகைகளுக்குப் பேட்டி அளிக்கவும், சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிக்கவும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து மாயாவதி, இது ஜனநாயக படுகொலை. சிலர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளது. அமித்ஷா, பிரதமர் மோடி வெறுப்புணர்வுடன் பேசுவதற்கு மட்டும் தேர்தல் ஆணையம் சுதந்திரம் கொடுக்கிறது என்று குற்றம்சாட்டியிருந்தார்.

தொடர்ந்து தனக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அவர் முறையீடு செய்துள்ளார். ஆனால், மாயாவதி கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், வெறுப்புணர்வைத் தூண்டும் அரசியல் தலைவர்களின் பிரசாரத்துக்குத் தடை விதிக்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்பதாகத் தெரிவித்துள்ளது.

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!

5 நிமிட வாசிப்பு

சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!

டிஜிபி ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட்?

5 நிமிட வாசிப்பு

டிஜிபி ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட்?

செவ்வாய் 16 ஏப் 2019