மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 ஏப் 2019

தப்ஸி பன்னுவின் அசத்தல் லுக்!

தப்ஸி பன்னுவின் அசத்தல் லுக்!

கதாபாத்திரத்திற்காக உடலை வருத்திக்கொள்வது அதிக அளவிலான ஒப்பனைகளை மேற்கொள்வது ஆகியவற்றை நடிகைகளை ஒப்பிடுகையில் நடிகர்களே அதிகளவில் மேற்கொள்கின்றனர். ஆனால் ஒரு சில நடிகைகள் இந்த சவாலை ஏற்று நடித்துவருகின்றனர் அதில் முக்கியமானவர் தப்ஸி பன்னு.

பாலிவுட்டில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வரும் தப்ஸி தற்போது துஷ்கர் ஹிரானந்தனி இயக்கும் சாந்த் கி ஆங்க் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்காக அவர் அறுபது வயது பெண் போன்ற தோற்றத்தில் நடிக்கிறார். தற்போது அவரது கதாபாத்திரத்தை விளக்கும் வகையிலான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

பிரகாஷி, சந்திரோ ஆகிய இரு துப்பாக்கிசுடும் வீராங்கனைகளின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இதன் திரைக்கதை உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்காக தப்ஸி துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். தப்ஸியின் தோற்றத்திற்காக ஹாலிவுட் படங்களுக்கு ஒப்பனைச் செய்யும் கலைஞர்கள் படத்தில் பணியாற்றுகின்றனர்.

இந்தியாவின் வறண்டக் கிராமம் ஒன்றின் பின்னணியில் கதை நடைபெறுகிறது. பிப்ரவரி மாதம் இதன் படப்பிடிப்பு உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கிராமப்புறப் பகுதிகளில் தொடங்கிய நிலையில் படக்குழு விரைவில் படப்பிடிப்பை நிறைவு செய்யவுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.அனுராக் காஷ்யப், சிபாசிஷ் சர்கார், நிதி பர்மர், உமானியா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

சென்னை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

செவ்வாய் 16 ஏப் 2019