மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

இந்தியர்களின் பிரச்சனை: தீவிரவாதம், வேலையின்மை, ஊழல்!

இந்தியர்களின் பிரச்சனை: தீவிரவாதம், வேலையின்மை, ஊழல்!

இந்தியர்களுக்கு கவலைதரக்கூடிய முக்கியப் பிரச்சனையாக தீவிரவாதம், வேலையின்மை, நிதி மற்றும் அரசியல் ஊழல் போன்றவை இருப்பதாக குளோபல் சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள இப்சாஸ் ஆய்வில், 'இந்தியாவில் நிதி மற்றும் அரசியல் ஊழல், வறுமை மற்றும் சமூக சமத்துவமின்மை ஆகியவை இந்தியாவில் முதன்மையான பிரச்சனைகளாக உள்ளன. அதற்கடுத்து, வேலைவாய்ப்பின்மை, குற்றங்கள், வன்முறைகள் மற்றும் சுகாதாரம் சார்ந்த பிரச்சனைகள் இந்தியர்களுக்கு கவலைதரக்கூடிய முக்கியப் பிரச்சனைகளாக உள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது. ”தீவிரவாதமானது இந்தியர்களுக்கு தொந்தரவு தரக்கூடிய பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது. வேலைவாய்ப்பின்மையைப் போக்கி புதிய வேலைகளை உருவாக்க வேண்டும் எனபதும் இந்தியர்களின் முக்கியத் தேவையாக உள்ளது” இப்சாஸ் பொது விவகாரங்கள் பிரிவு அதிகாரி பரிஜாத் சக்ரபோர்த்தி கூறுகிறார்.

அதேசமயத்தில் இந்த நாடு சரியான பாதையில் இயங்குவதாக 73 விழுக்காட்டினர் ஆய்வில் கூறியுள்ளனர். சீனர்களே தங்கள் நாடு சரியான திசையில் பயணிப்பதாக அதிகளவில் நம்புகின்றனர். சீனாவில் 10ல் 9 பேர் தங்களது நாடு சரியான திசையில் பயணிப்பதாக நம்புகின்றனர். இரண்டாவது இடத்திலும் சவுதி அரேபியாவும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும், நான்காவது இடத்தில் மலேசியாவும் உள்ளது. இந்தியா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, சவுதி அரேபியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 28 நாடுகளில் 18 வயது முதல் 65 வயதுக்குட்பட்டவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon