மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

பிரச்சாரத்துக்கு வந்த விஜயகாந்த்

பிரச்சாரத்துக்கு வந்த விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு பின் பழையபடி செயல்பட முடியவில்லை. அவரை எப்படியாவது ஒரு சில வார்த்தைகளாவது பேச வைத்து இறுதிகட்ட தேர்தல் பரப்புரையில் ஈடுபடுத்தலாம் என்று முயற்சிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று மாலை சென்னையில் விஜயகாந்த் பிரச்சாரம் நடத்த திட்டமிட்டிருந்தார். இதை முன்னிட்டு விஜயகாந்த் வெளியிட்ட வீடியோவில், “எனக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் என் அன்பு கலந்த நன்றிகள். நமது சின்னம் முரசு. நாம் நான்கு தொகுதிகளில் போட்டியிடுகிறோம். கூட்டணிக் கட்சிகளின் சின்னங்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

அந்த வீடியோவில் விஜயகாந்த் மிகவும் சிரத்தை எடுத்து பேசுவது தெளிவாகத் தெரிந்தது. நாளையுடன் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் முடியவுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விஜயகாந்தை பார்க்க தேமுதிக தொண்டர்கள் சென்னையில் குவிந்துள்ளனர்.

மாலை 4 மணிக்கு தனது வீட்டிலிருந்து புறப்பட விஜயகாந்த் திட்டமிட்டிருந்தார். ஆனால் 2.15 மணி நேரம் தாமதமாக 6 மணியளவில்தான் வீட்டிலிருந்து புறப்பட்டார். தொற்றுப் பிரச்சினைகள் இருப்பதால் அவர் நீண்ட நேரம் பேசக்கூடாது என மருத்துவர்களும் அறிவுறுத்தியுள்ளனர்.

முதலில் மத்திய சென்னை மக்களவைத் தொகுதியை சேர்ந்த வில்லிவாக்கம் பகுதியில் பிரச்சாரப் பணிகளை தொடங்கினார் விஜயகாந்த். அவர் வாகனத்தில் வரும்போது ஏராளமான தேமுதிக தொண்டர்களும், கூட்டணிக் கட்சி தொண்டர்களும் கொடிகளுடன் உற்சாக வரவேற்பளித்தனர். மேலும், பல தேமுதிக தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் அணிவகுப்பு நடத்தினர். தொண்டர்கள் அனைவருக்கும் கையசைத்தபடி வாகனத்தில் வலம்வந்தார் விஜயகாந்த்.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon