மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 ஏப் 2019

புன்னகை மன்னன் வசந்தகுமார்: குஷ்பு புகழாரம்!

புன்னகை மன்னன் வசந்தகுமார்: குஷ்பு புகழாரம்!

கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஹெச்.வசந்தகுமாரை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்ட குஷ்பு, அவர் சொந்தக்காசில் மக்களுக்கு உதவிகள் செய்வார் என்று குறிப்பிட்டார்.

நேற்று (ஏப்ரல் 14) கன்னியாகுமரி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஹெச்.வசந்தகுமாரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளருமான குஷ்பு. நாகர்கோவிலில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய குஷ்பு, அதன்பின் அத்தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கொட்டாரம் பகுதியில் பிரச்சாரம் செய்தபோது, ராகுல் காந்தி பிரதமரானால்தான் எல்லா மாற்றங்களும் நிறைவேறும் என்று தெரிவித்தார். இந்தியாவின் பிரதமர் ராகுல் காந்தி என்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கனவை நனவாக்க வேண்டாமா என்று அங்கிருந்த மக்களிடம் கேள்வி எழுப்பினார்.

“தளபதி ஸ்டாலினின் கனவை நிச்சயமாக நனவாக்குவோம். அதற்காக, வரும் 18ஆம் தேதி வாக்களிக்கும்போது புன்னகை மன்னன் அண்ணன் ஹெச்.வசந்தகுமாருக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். தொகுதியில் யாரைக் கேட்டாலும், அவர் தாராளமனமுடையவர் என்று சொல்வார்கள். தன்னுடைய சொந்தக்காசில் மக்களுக்கு உதவிகள் செய்து வருபவர். ஆட்சியில், பதவியில் இல்லாவிட்டாலும் நல்லது செய்து வருபவர். போன தடவை தேர்தலில் (மக்களவை) தோற்றாலும், உங்களுக்கு நல்லது செய்வதை அவர் நிறுத்தவில்லை. நாங்குநேரியில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் அவரது சாதனைகளைக் கேட்டுப் பாருங்கள்” என்று கூறினார்.

பிரச்சாரத்தின்போது, வசந்தகுமார் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல; திமுகவுக்கும் நம்பிக்கை நட்சத்திரம் என்று தெரிவித்தார் குஷ்பு. “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டபடி ஆண்டுதோறும் 72,000 ரூபாய் கிடைக்கும். அதாவது, மாதம் 6,000 ரூபாய் பணம் கிடைக்கும். அதுவும் பெண்களின் வங்கிக்கணக்கில் நேரடியாகப் போடப்படும். பெண்கள் பொருளாதார ரீதியாகத் தங்களை மேம்படுத்த வேண்டும்” என்று அவர் கூறினார்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு... என்னென்ன சிறப்பு?

5 நிமிட வாசிப்பு

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு... என்னென்ன சிறப்பு?

வருமான வரி தாக்கலுக்கு கால அவகாசம்!

2 நிமிட வாசிப்பு

வருமான வரி தாக்கலுக்கு கால அவகாசம்!

ஈமு கோழி மோசடி: மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

4 நிமிட வாசிப்பு

ஈமு கோழி மோசடி: மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

திங்கள் 15 ஏப் 2019