மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

உலகக் கோப்பையை வெல்லத் தயாரான 15 பேர்!

உலகக் கோப்பையை வெல்லத் தயாரான 15 பேர்!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று (ஏப்ரல் 15) அறிவிக்கப்பட்டுள்ளது

ஐபிஎல் தொடரின் பரபரப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் உலகக் கோப்பைத் தொடர் மே 30ஆம்தேதி இங்கிலாந்தில் தொடங்கவுள்ளது. இத் தொடரில் பங்கேற்கும் அணிகள் 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை எப்ரல் 23ஆம் தேதியோ அதற்கு முன்னரோ வெளியிடவேண்டும். இந்நிலையில் இந்திய அணிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்காக மும்பையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தேர்வுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் முடிவில், விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

தோனிக்கு பதிலாக மாற்று விக்கெட் கீப்பராக யாரை தேர்வு செய்வது என்பது பெரும் கேள்வியாக உருவெடுத்தது. ஏனென்றால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடர்களில் பங்கேற்ற ரிஷப் பந்த், ஐபிஎல் தொடரில் சிறப்பான பங்களிப்பை அளித்துவரும் கே.எல்.ராகுல், அனுபவம் வாய்ந்த வீரரான தினேஷ் கார்த்திக் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் கே.எல்.ராகுலையும், தினேஷ் கார்த்திக்கையும் தேர்வு செய்துள்ளனர்.

கே.எல்.ராகுலை அணிக்குள் கொண்டுவந்ததன் மூலம் தொடக்க வீரர்களுக்கான மாற்றாகவும் அவரால் செயல்படமுடியும், நான்காவது வீரராகவும் களமிறங்க வாய்ப்பு உள்ளது. தினேஷ் கார்த்திக்கும் விக்கெட் கீப்பராகவும் நான்காவது வீரராகவும் இறங்க வாய்ப்புகள் உள்ளன.

ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா, விஜய் ஷங்கர் இருவரில் யாரை தேர்வு செய்வார்கள் என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் இருவரையும் டிக் அடித்துள்ளனர். சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜாவுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

15 பேர் கொண்ட இந்திய அணி

விராட்கோலி (கேப்டன்),

ரோஹித் ஷர்மா (துணை கேப்டன்),

ஷிகர் தவன்,

கே.எல்.ராகுல்,

தோனி (விக்கெட் கீப்பர்),

கேதர் ஜாதவ்,

ஹர்திக் பாண்டியா,

விஜய் ஷங்கர்,

குல்தீப் யாதவ்,

யுஜ்வேந்திர சஹல்,

பும்ரா,

புவனேஸ்வர் குமார்,

முகமது ஷமி,

ரவீந்திர ஜடேஜா,

தினேஷ் கார்த்திக்.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon