மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

கடைசியா ஒரு தடவை பார்த்துக்கங்க: அப்டேட் குமாரு

கடைசியா ஒரு தடவை பார்த்துக்கங்க: அப்டேட் குமாரு

‘உன்ட்ட வாங்குன காசுக்கு ஏணியில ஒரு குத்து, அவன்ட்ட வாங்குன காசுக்கு தென்னை மரத்துல ஒரு குத்து... ஆக மொத்தம் ரெண்டு குத்து’ அப்படின்னு ஒரு காமெடி ஞாபகம் இருக்கா.. தேர்தல்ல நம்ம மக்கள் யாரும் அப்படி பண்றது இல்ல. இருக்குற அத்தனை சேனலும் அதைத் தான் பண்ணிகிட்டு இருக்கு. இதுலாம் ஒரு ஆட்சியான்னு விளம்பரம் வருது.. லேசா திரும்புறதுக்குள்ள இதுதான் மக்களுக்கான ஆட்சின்னு இன்னொரு விளம்பரம் வருது. வழக்கமா அலப்பறையை கொடுக்குற பெரிய கட்சிகள் தான் பண்ணுவாங்கன்னு பார்த்தா ஒரு பக்கம் கையை முறுக்கிகிட்டு சீமானும், டிவிக்கு உள்ளேயே டிவியை உடைச்சுகிட்டு கமலும் தான் அதிகமா வாராங்க. இவங்களுக்கு எல்லாம் எங்க இருந்து இவ்வளவு காசு வந்துச்சுன்னு அவங்க எல்லாம் ஒண்ணு சேர்ந்து கேட்டா.. உங்க கட்சி தலைவர் கட்சி ஆரம்பிக்கும் போது எவ்வளவு சொத்து வச்சுருந்தாருன்னு கேள்வியை திருப்பிவிட்டுடுறாங்க. அவ்ளோ தான் அவங்க எஸ்கேப். அப்புறம் பவர் கட் ஆயிடுச்சுன்னு வெளியே போய் எட்டிப் பார்க்காம அப்டேட்டை பாருங்க.

@mohanramko

பள்ளியில் பி. டி பீரியட்டில் விளையாட போகும் போது, அழைத்து வரலாறு பாடம் நடத்தற மாதிரி, ஐபிஎல் மேட்ச் ஆரம்பிக்கும் போது சீரியலை வச்சி உயிரை எடுக்கறாங்க

@RahimGazzali

வி.ஐ.பி. தொகுதிகளுக்கு மட்டும்தான் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாயா? எங்களுக்கெல்லாம் நூறு, இருநூறு தானான்னு அப்பாவியாய் கேட்டபடி நடந்தார் அந்த குடிமகன்.

@parveenyunus

நான் எதிர்க்கட்சி இல்லை; ஆனா என் வீட்டிலும் வருமானவரி சோதனை நடந்தது -சரத்குமார் # வாக்குவங்கியே இல்லை..ஆனா நீங்க கட்சி நடத்தலியா அது மாதிரி தான்.

@parveenyunus

விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் # ஆறு மேட்ச்ல தோத்துட்டு ஏழாவது மேட்ச்ல ஜெயிச்சதுக்கா..?

@Thirumurugan Gandhi

'நீட் தேர்வை ரத்து செய்தால் தமிழகம் முன்னேறி விடுமா?' என்பதும் 'நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம்' என்பதும் வேறுவேறு குரல்கள் அல்ல

@h_umarfarook

மோடி பேசிக்கொண்டிருக்கும் போது மேடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு !

அனல் பறக்க பேசி இருப்பாரோ ?!

@shivaas_twitz

இந்த எண்ணெயைய் பயன்படுத்தினா முடி கொட்டாது,

இந்த சென்ட் அடிச்சா பெண்களை ஈர்க்கலாம்,

இந்த கிரீம் தடவினா 30 நாளில் சிவப்பாகிடலாம்...

இந்த விளம்பரங்களுக்கு இடையே வருது, கட்சிக்கு ஓட்டு கேட்கும் விளம்பரம்

@Kadhar_Twitz

கடைசியா ஒரு தடவை வேட்பாளர்கள் முகத்த பார்க்காதவங்களாம் பாத்துக்கோங்க...!

இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு...!நாளையோட பிரச்சாரம் முடியுது.. அப்புறம் 5 வருசத்துக்கு பாக்க முடியாது

@Annaiinpillai

பாஜக தலைமையிலான மத்திய அரசு மீண்டும் அமைந்தால், இந்தியா வல்லரசாக மாறும் - சரத்குமார் # அப்ப விஜயகாந்த் வல்லரசு இல்லையா யுவர் ஆனர்?!

@Annaiinpillai

வீட்டுக்கு வரும் பொழுது மறக்காம இதை வாங்கிட்டு வாங்கனு சொல்ற மனைவிக்கிட்ட வாங்க மறந்துட்டு போய் சிரிச்சிக்கிட்டே நிற்பது கணவர்களின் தலையாய கடமைகளுள் ஓன்று!

@Suyanalavaathi

இந்த தேர்தலுக்கு பிறகுதான் என் அரசியல் வாழ்க்கை துவங்கும் - எடப்பாடி பழனிச்சாமி #

OPS : இப்பிடியே டயலாக் பேசி பேசி என்னோட அரசியல் வாழ்க்கை சேர்த்து முடிச்சுருவாரு போலயே

@mangudiganesh

மருத்துவமனையில் ஜெயலலிதாவை என்னை பாக்க விடல நான் அரசியலுக்கு வந்தேன் _தீபா

தீபா என்னை வீட்டுக்குள்ள விடல நான் அரசியலுக்கு வந்தேன் _மாதவன்

என் கல்யாண மண்டபத்தை இடித்து விட்டார்கள், நான் அரசியலுக்கு வந்தேன் _விஜயகாந்த்

எம்.ஜி.ஆர். இல்ல நான் அரசியலுக்கு வந்தேன் _கமல்

@senthilvel_1969

பிரதமரை நாங்கள்தான் தீர்மானிப்போம் என்கிறார் டிடிவி.தினகரன்!

ஏற்கெனவே பன்னீர், பழனிச்சாமி ஆகியோரை முதல்வராகவும், ராமகோவிந்தை குடியரசுத்தலைவர் பதவிக்கும் பரிந்துரை செய்த முன் அனுபவத்துடன். ...

@MJ_twets

மாடியில் காயப் போட்ட துணிகளை மதிய நேரத்திற்குள் மறக்காமல் எடுத்து விடவும்; தீப்பிடித்து எரியும் அபாயம் உள்ளது.!

@HAJAMYDEENNKS

திருவிழா முடிந்த ஊர் மாதிரி வெறிச்சோடி கிடக்க போகிறது தேர்தலுக்கு பின் நாடும் !

@RahimGazzali

இப்பல்லாம் கரண்டு போனவுடன் வெளில எட்டிப்பார்க்கறாங்க

ஏன் பக்கத்து வீட்ல கரண்டு இருக்கான்னு பார்க்கவா?

இல்ல... ஓட்டுக்கு பணம் கொடுக்க வர்றாங்களான்னு பார்க்க.

@Iam_SuMu

நாலுநாள் தொடர்ந்தாப்ல லீவ் வருதுனு பூராப்பயலும் டூர் ப்ளான் பண்ணிட்டிருக்கானுக போலிருக்கு, அவனவன் ஓட்டு போடுறதுக்காக வெளிநாட்ல இருந்து ஊருக்கு வர்றான்,இவனுக பகுமானமா டூருக்கு போறானுகளாம்ல அப்புறம் அது சரியில்ல இது சரியில்லனு ஐந்து வருசம் ஒப்பாரி வைப்பானுக

@shivaas_twitz

எம்எல்ஏ ஹாஸ்டல்ல சோதனையாமே..?

ஏதாவது தொகுதில ஆட்டையை கலைக்க போறாய்ங்களா..?

@star_nakshatra

ஒரு வீட்டின் கோபத்தின் அளவுகளை அநேக நேரங்கள் "நெளிந்த பாத்திரங்களே" சொல்லி விடும்

@asachanakkiyan

அம்மாவின் ஆன்மா எங்களை ஜெயிக்க வைக்கும்

சொல்கிறார்

தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன்

//ஆர்.கே நகர் தேர்தலின் போது ஆன்மா லீவு போட்டு போயிருச்சி போல..

-லாக் ஆஃப்

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon