மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

அறம் இயக்குநரின் அடுத்த படம்!

அறம் இயக்குநரின்  அடுத்த படம்!

நயன்தாரா நடித்த அறம் திரைப்படத்தை இயக்கிய கோபி நயினார் இயக்கவுள்ள அடுத்தப் படம் பற்றிய முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

2017ஆம் ஆண்டில் கோபி நயினார் இயக்கத்தில் வெளியான அறம், ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட திரைப்படமாகும். நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடித்த இப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றதுடன் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதன் பின் அரசியல் மற்றும் சமூக வட்டத்தில் கோபி நயினாரின் கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்றன.

அறம் திரைப்படத்தைத் தொடர்ந்து கோபி நயினார் வட சென்னையை மையப்படுத்தி ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க விளையாட்டை மையப்படுத்திய பெயரிடப்படாத திரைப்படத்தை தொடங்கினார். அந்தப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் கோபி நயினாரின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.

நடிப்புக்கு சவாலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துவரும் பாபி சிம்ஹா தற்போது கோபி நயினார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். பேட்ட திரைப்படத்தில் ரஜினிகாந்த்துடன் ஒரு கதாபாத்திரம் மற்றும் அக்னி தேவியில் கதாநாயகனாக நடித்த பின், பாபி சிம்ஹா முதன் முறையாக அறம் இயக்குநருடன் இணைகிறார்.

கமர்ஷியல் கலந்த அதிரடி ஆக்‌ஷனாக உருவாகும் இப்படத்தை பற்றிய இதர தகவல்கள் விரைவில் வெளியாகவுள்ளன.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon