மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 ஏப் 2019

வாழ்வின் தத்துவத்தைச் சொன்ன பெரு மரம்!

வாழ்வின் தத்துவத்தைச் சொன்ன பெரு மரம்!

ஒரு கப் காபி

நம் அசாத்திய நம்பிக்கைகளை, எதிர்பார்ப்புகளை, திட்டமிடல்களை, வாழ்க்கை பற்றிய புரிதல்களை இரண்டு நாள் காய்ச்சல் மாற்றிப்போட்டு விடுகிறது. நம் இருப்பு குறித்த கேள்வியையே எழுப்பிவிடுகிறது.

சாதித்துக் காட்ட வேண்டும் என்று கிளம்பும் வேகத்துக்குச் சிறு தோல்வி பெரிய தடையை போட்டுவிடுகிறது. தொழிலில் ஏற்படும் பின்னடைவு மீள முடியாத நஷ்டமாகக் கண்முன் விரிகிறது.

வெற்றியை, ஆரோக்கியத்தை, லாபத்தை நோக்கி ஓடுவதில் எந்தப் பிழையும் இல்லை. ஆனால் பயணத்தில் அது மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைப்பதில் தான் பிரச்சினை உள்ளது.

ஒருமுறை என் நண்பர்களுடன் மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனைச் சந்திக்கச் சென்றிருந்தேன். 90 வயதைக் கடந்திருந்தார். அப்போது அவர் எழுத்தில் எந்த நூலும் வெளிவராமல் இருந்தது. அவரிடம், ‘இப்போ ஏதும் எழுதுறது இல்லையா’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘மரம் எல்லா காலத்துலேயும் காய்க்குறது இல்லையே’ என்றார். எத்தனை அனுபவப்பூர்வமான வார்த்தை.

காய்ப்பது ஒரு காலம், பூப்பது ஒரு காலம், இருக்கின்ற இலைகளை எல்லாம் உதிர்த்துவிட்டு காற்று வாங்குவது ஒரு காலம் என எத்தனை பருவங்கள் உள்ளன. மரம் என்றால் வருடம் முழுவதும் காய்த்து தள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது மூடத்தனம் அல்லாமல் வேறென்ன? காய்க்காவிட்டால் என்ன... நிழல் தராமலா போய்விடுகின்றன?

ஆனால், அடுத்த புத்தகத் திருவிழாவுக்கே கி.ராவின் குறுநாவல் ஒன்று வெளியானது. 96 வயதில் இப்போதும் எழுதிக் கொண்டுள்ளார்.

உண்மையில் பயணத்தில் ஏற்படும் தடை என்பது இளைப்பாறுதலுக்கான நேரம். ஓய்வில்லாமல் உழைக்கும் உடல் தனக்கு வேண்டிய ஓய்வைக் காய்ச்சல் மூலம் பெற்றுக்கொள்கிறது. வெற்றிக்கான ஓட்டத்தை சற்று நிறுத்திவிட்டுச் சுற்றியிருப்பவற்றைப் பார்க்கும்போது இலக்கு தெளிவாகிறது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு... என்னென்ன சிறப்பு?

5 நிமிட வாசிப்பு

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு... என்னென்ன சிறப்பு?

வருமான வரி தாக்கலுக்கு கால அவகாசம்!

2 நிமிட வாசிப்பு

வருமான வரி தாக்கலுக்கு கால அவகாசம்!

ஈமு கோழி மோசடி: மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

4 நிமிட வாசிப்பு

ஈமு கோழி மோசடி: மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

திங்கள் 15 ஏப் 2019