மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 ஏப் 2019

நிகோபார்: ஒரு வாக்கு கூட பதிவாகாத சாவடி!

நிகோபார்: ஒரு வாக்கு கூட பதிவாகாத சாவடி!

அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள வாக்குச் சாவடியொன்றில் ஒரு வாக்கு கூட பதிவாகாதது தெரிய வந்துள்ளது.

இந்தியாவின் தென்முனையாகக் கருதப்படும் இந்திரா முனை, நிகோபார் தீவுகளில் உள்ளது. இங்கிருந்து 20 கி.மீ. தொலைவில் சோம்பன் ஹட் என்ற இடம் உள்ளது. கடந்த 11ஆம் தேதியன்று அந்தமான் நிகோபார் தீவுகளில் மக்களவைத் தேர்தல் நடந்தபோது, சோம்பன் ஹட்டில் இரண்டு வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. ஆனால், இங்கு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது, இங்குள்ள வாக்குச் சாவடியில் இரண்டு பேர் வாக்குப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

சோம்பன் ஹட் பகுதியைச் சுற்றியுள்ள காடுகளில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அவ்வப்போது ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக மட்டும் வெளியே வருவது வழக்கம். ஆனால், இம்முறை அவர்களில் ஒருவர் கூட வாக்களிக்க வரவில்லை. இது பற்றிப் பேசிய அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைமை தேர்தல் அதிகாரி கே.ஆர்.மீனா, தேர்தல் பற்றி பழங்குடியின மக்களுக்குத் தகவல் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.

“சோம்பன் ஹட் பகுதியில் 66 பேர் மற்றும் 22 பேர் வாக்களிக்கும் வகையில் இரண்டு வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. ஆனால், இந்த ஆண்டு ஒருவர் கூட வாக்களிக்கவில்லை. துணியில் முடிச்சு போட்டு, தேர்தலுக்கு எத்தனை நாட்கள் உள்ளன என்று பழங்குடி மக்களுக்கு அப்பகுதியில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர். சைகை மொழியிலும் ஏப்ரல் 11ஆம் தேதி தேர்தல் நடக்கவிருப்பது பற்றிக் கூறினர். ஆனாலும் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை. அவர்களுக்குச் சரியாகத் தகவலை அளிக்கவில்லையா அல்லது வாக்களிக்க விருப்பமில்லையா என்பது தெரியவில்லை” என்றார் மீனா. பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று தொந்தரவு செய்யக் கூடாது என்று மத்திய அரசு தடை விதித்துள்ளதால், தேர்தல் அதிகாரிகள் யாரும் காட்டுக்குள் சென்று அவர்களை வாக்களிக்குமாறு கட்டாயப்படுத்த முடியாது என்று தெரிவித்தார்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு... என்னென்ன சிறப்பு?

5 நிமிட வாசிப்பு

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு... என்னென்ன சிறப்பு?

வருமான வரி தாக்கலுக்கு கால அவகாசம்!

2 நிமிட வாசிப்பு

வருமான வரி தாக்கலுக்கு கால அவகாசம்!

ஈமு கோழி மோசடி: மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

4 நிமிட வாசிப்பு

ஈமு கோழி மோசடி: மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

திங்கள் 15 ஏப் 2019