மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 25 செப் 2020

காஞ்சிபுரம் திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு!

காஞ்சிபுரம்  திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு!

போலீசாரை தரக்குறைவாக பேசியதாக காஞ்சிபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நாளையுடன் முடிவடையவுள்ளது. இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 14) நடிகர் உதயநிதி ஸ்டாலின் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து காந்திரோடு தேரடி அருகே பிரச்சாரம் செய்வதற்காக திமுகவினர் கூடியிருந்தனர். இதற்காக காவல்துறையினரிடம் அனுமதி பெற்றிருந்தனர். பிரச்சாரத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக அங்கு போலீசாரும் குவிந்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், காந்திரோடு தேரடி அருகே ஆஞ்சநேயர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தருவதாக இருந்தது.

ஓபிஎஸ் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்த திமுக எம்.எல்.ஏ எழிலரசன், இப்பகுதியில் பிரச்சாரம் செய்ய எங்களுக்கு அனுமதி கொடுத்துவிட்டு அவர்களைஅனுமதிப்பதா என்று கூறி காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது காவல்துறையினரை அவர் தரக்குறைவாக பேசியிருக்கிறார். பின்னர் அவருடன்சேர்ந்து திமுகவினரும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவ்விடத்திலேயே சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக சின்ன காஞ்சிபுரம் காவல்துறையில் புகார்அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி காவல் ஆய்வாளர் சுரேஷ் சண்முகம், எம்எல்ஏ எழிலரசன் உள்பட 50பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.

முன்னதாக எழிலரசன், சிறுவள்ளூர், காரைமேல் கொடுகூர், கணியனூர், வையாவூர்,மோட்டூர், கருவூர் ஆகிய கிராமங்களுக்கு திமுக நிர்வாகிகள் வேதாசலம், பழனி, பூபாலன், சசிகுமார், ஆறுமுகம், டில்லிபாபு உள்ளிட்டோருடன் சென்று வாக்கு சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon