மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 16 செப் 2019

மோடி பயோபிக்: புதிய உத்தரவு!

மோடி பயோபிக்: புதிய உத்தரவு!

நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்துக்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ள நிலையில் உச்ச நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 15) புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

‘பி.எம்.நரேந்திர மோடி’ படத்தை வெளியிடுவது குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தெரிவித்திருந்தது. அதன் பின்னர் தேர்தல் ஆணையம் அரசியல் தொடர்பான கருத்துக்களையுடைய அத்தனை வாழ்க்கை வரலாற்று திரைப்படங்களையும் மக்களவைத் தேர்தல் முடியும் வரை வெளியிடக்கூடாது என உத்தரவிட்டது.

அதன்பின்னர் ‘பி.எம்.நரேந்திர மோடி’ படத்தின் தயாரிப்பு தரப்பு தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், “இந்தப் படத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பார்வையிட்டு தேர்தல் நேரத்தில் வெளியிடலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்யவேண்டும். ஆணையத்தின் கருத்தை சீலிடப்பட்ட கவரில் வரும் 22ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

இப்படத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் மோடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஓமங் குமார் இயக்கத்தில் சந்தீப் சிங் உட்பட நான்கு தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon