மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 21 செப் 2019

பெரம்பலூர் தொகுதிக்கு ரயில் சேவை: பாரிவேந்தர்

பெரம்பலூர் தொகுதிக்கு ரயில் சேவை: பாரிவேந்தர்

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில், குளித்தலை பகுதியை சேர்ந்த கிராமங்களில் இன்று தீவிர பரப்புரையில் ஈடுபட்டார் பாரிவேந்தர்.

அப்போது அய்யர்மலை பகுதியில் பேசிய பாரிவேந்தர், “நாடாளுமன்ற தொகுதிகளில் ரயில்பாதையையே பார்க்காத தொகுதி பெரம்பலூர் என்று மக்கள் பேசுகிறார்கள். இன்று பேருந்துகளில் பயணிக்க எவ்வளவு செலவாகிறது என மக்களுக்கு தெரியும். சொந்த வாகனங்கள் வைத்திருப்போருக்கும் பெட்ரோல், டீசல் விலை ஒரு பிரச்சினையாக உள்ளது.

ரயிலில் குறைந்த செலவில் பயணிக்க முடியும். அதற்கு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு, ரயில் சேவை தொடங்கப்பட வேண்டும். இதையெல்லாம் பெறுவதற்கு எல்லா முயற்சிகளையும் நான் எடுப்பேன் என உறுதியளிக்கிறேன். குளித்தலையிலிருந்து மணப்பாறை செல்லும் வழியில் ரயில்வே பாதையில் மேம்பாலம், குளித்தலையில் பேருந்து நிலையம், மணல்மேட்டில் காவிரி ஆற்றில் தடுப்பணை ஆகியவற்றை அமைத்து தருவேன் என உறுதியளிக்கிறேன்.

பின் தங்கிய தொகுதியாக இருக்கும் பெரம்பலூரை வளர்ந்த தொகுதியாக மாற்ற பாடுபடுவேன். பெரம்பலூர் தொகுதியில் எஸ்.ஆர்.எம் குழுமத்தின் சார்பாக ஐந்து கிளை மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு இலவச மருத்துவ சேவைகள் வழங்கப்படும். தேர்தல் முடிந்தபின் தொகுதிக்கான தேவைகள் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றப்படும்” என்று கூறினார்.

சனி, 13 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon