மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 25 ஜன 2020

நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள்!

நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள்!

ஒரு கப் காபி

உங்கள் வாழ்க்கைத் தரம், நீங்கள் உங்களிடமும் மற்றவர்களிடமும் கேட்கும் கேள்விகளின் தரத்தினால்தான் நிர்ணயிக்கப்படுகிறது.

நமது மனம் கூகுள் தேடுபொறி போன்றது. அது கேள்விகளுக்கு விடை தேடும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் எதைத் தேடினாலும், அதற்கான விடை கிடைத்துவிடும்.

கேள்வி மனதைக் கொக்கிப்போட்டு இழுக்கிறது. அதற்கான விடையை அளிக்க வேண்டியது மனதின் வேலை. இந்தக் கோட்பாட்டைச் செயல்படுத்துவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் பலன்களை உங்களுக்கு வழங்க கூடிய நல்ல தரமான கேள்விகளை மனதுக்குள் அனுப்பத் தொடங்குவீர்கள்.

உங்களுக்கு மிகவும் அடிப்படைத் தேவையான கேள்வி எது என்பதை உணர்ந்துகொள்வதுதான் இதன் முதல்படி.

பெரும்பாலானவர்கள் தங்களிடமும் மற்றவர்களிடமும், வாழ்க்கை ஏன் அவர்கள் விரும்பியபடி அமையவில்லை என்பதற்கான காரணத்தைக் கூறும் கேள்விகளையே கேட்கிறார்கள்.

“ஏன்” என்னும் கேள்வி

“அவன் ஏன் என்னைக் கைவிட்டான்?”

”என்னால் ஏன் அதிகமாகச் சாப்பிடுவதை நிறுத்த முடியவில்லை?”

“எனக்குப் பிடித்த வேலை ஏன் கிடைக்கவில்லை?”

“எனக்கு ஏன் நிறைய பணம் கிடைப்பதில்லை?”

நீங்கள் இதுபோன்ற ஏன் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தால், இவற்றுக்கான பதில்கள் அன்றாடம் உங்களுக்குக் கிடைத்துவிடும்.

“எப்படி” என்னும் கேள்விகள்

“நேசம் பொங்கும் உறவுகளோடு நான் இருப்பது எப்படி?”

“மிகச் சரியான எடையுடன் இருப்பது எப்படி?

“எனக்குப் பிடித்த வேலையைப் பெறுவது எப்படி?”

“நிறைய பணம் எனக்கு எப்படி கிடைக்கும்?”

இவை நீங்கள் எங்கே செல்ல விரும்புகிறீர்கள் என்பதற்கான பதில்களை உங்களுக்கு வழங்கும்.

உங்களுக்கு மிகவும் தேவையான கேள்விகளைக் கண்டறிய, பின்வரும் சிறிய பயிற்சியை மேற்கொள்ளுங்கள்:

கண்களை மூடியவாறு ஒரு சில முறை ஆழமாக மூச்சை உள்ளிழுத்துக்கொள்ளுங்கள். உடலளவில் முழு கவனத்தோடு இருங்கள். பிறகு, உங்களிடம் நீங்களே, “நான் பெரும்பாலும் கேட்கும் கேள்வி என்ன?” என்று கேட்டுக்கொள்ளுங்கள்.

கேள்வியில் தெளிவு இருந்தால் சரியான விடை பிறக்கும்!

- சிட்ரா ஜாஃப்ரி

நன்றி: விழிப்புணர்வு இதழ் (வெளியீடு: சக்சஸ் ஞான்)

வியாழன், 11 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon