மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 6 ஆக 2020

ஹாலிவுட் பக்கம் நகரும் ஐஸ்வர்யா

ஹாலிவுட் பக்கம் நகரும் ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா ராய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஃபன்னி கான் திரைப்படத்தைத் தொடர்ந்து பாலிவுட்டில் வேறெந்தப் படமும் வெளியாகாத நிலையில் அவர் ஹாலிவுட் செல்வதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.

எந்திரன் படத்தைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் தற்போது மணிரத்னம் இயக்கும் புதிய படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் வலம் வரவுள்ளார். பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் உள்ளார் மணிரத்னம். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். ஐஸ்வர்யா ராயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இந்தியில் தனது கணவர் அபிஷேக் பச்சனுக்கு ஜோடியாக குலோப் ஜாமூன் எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.

இந்தி, தமிழ் என கைவசம் படங்கள் இருப்பினும் ஐஸ்வர்யா ராயின் கவனம் ஹாலிவுட் பக்கம் திரும்பியுள்ளது. இது குறித்து பிங்க்வில்லா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஐஸ்வர்யா ராய் ஹாலிவுட்டில் நடிக்கும் படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்” என்று கூறியுள்ளனர். ஐஸ்வர்யா ஹாலிவுட் வாய்ப்புக்காக ஒரு டீமை அமைத்திருப்பதாகவும் அவர்கள் அங்கு ஐஸ்வர்யாவுக்கான வாய்ப்புகளை கவனித்துவருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

வியாழன், 11 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon