மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஏப் 2019

சேலம்: கடன் தொல்லையால் 3 பேர் தற்கொலை!

சேலம்: கடன் தொல்லையால் 3 பேர் தற்கொலை!

கடன் தொல்லையால் சென்னையைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் தனது மனைவி மகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ளது செல்வம் ஹோட்டல் என்ற தனியார் தங்கும் விடுதி. நேற்று (ஏப்ரல் 10) மாலை சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 60) இந்த ஹோட்டலில் அறை எடுத்து தங்கினார். அவரது மனைவி அனுராதா (வயது 50), மகள் ஆர்த்தி (வயது 22), ஆசிகா (வயது 20) ஆகியோரும் அவருடன் தங்கினர்.

இன்று காலை 8 மணியளவில் விஜயகுமார் குடும்பத்தினர் தங்கியிருந்த அறையில் இருந்து முனகல் சத்தம் வந்ததைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர் ஹோட்டல் ஊழியர்கள். இதையடுத்து, பூட்டிய அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அறையினுள் விஜயகுமார், அனுராதா, ஆசிகா ஆகிய மூவரும் உயிரிழந்த நிலையில் பிணமாகக் கிடந்தனர். விஜயகுமாரின் மூத்த மகள் ஆர்த்தி மட்டும் உயிருக்குப் போராடியதைக் கண்ட ஹோட்டல் நிர்வாகிகள், இதுபற்றி அழகாபுரம் காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனர்.

விஷம் குடித்தும், கையை அறுத்துக் கொண்டும் மயங்கிய நிலையில் இருந்த ஆர்த்தியை மீட்டனர் போலீசார். அவரை சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உடனடியாக, அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சென்னையில் உள்ள விஜயகுமாரின் உறவினர்களுக்கு இது பற்றித் தகவல் அனுப்பினர் போலீசார்.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து அழகாபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மருத்துவமனையில் இருக்கும் ஆர்த்தி, சேலம் அழகாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசனிடம் நடந்தது என்னவென்று வாக்குமூலம் அளித்துள்ளார். “எனது தந்தை விஜயகுமார் சென்னை சூளைமேட்டில் பாலாஜி பவன் என்ற ஹோட்டலை நடத்தி வருகிறார். அதனை நடத்துவதற்காக ஷியாம் என்பவரிடம் இருந்து கடன் வாங்கியிருந்தார். இந்த கடனைத் திருப்பிக் கேட்டு ஷியாம் தொல்லை கொடுத்து வந்தார். இதனால் எனது தந்தை விஜயகுமார் குடும்பத்தோடு சேர்ந்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்” என்று தெரிவித்துள்ளார்.

நால்வரும் திட்டமிட்டு விஷம் வாங்கி வந்து குளிர்பானத்தில் கலந்து குடித்ததும், விஷம் குடித்தும் சாகாததால் ஆர்த்தி தனது கையை பிளேடால் அறுத்து தற்கொலை செய்ய முயற்சித்ததும் அவரது வாக்குமூலத்தில் இருந்து தெரிய வருவதாகக் கூறியுள்ளனர் போலீசார்.

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

ஓட்டுக்கு பணம்: மக்களிடம் சத்தியம் வாங்க முடியாது!

2 நிமிட வாசிப்பு

ஓட்டுக்கு பணம்: மக்களிடம் சத்தியம் வாங்க முடியாது!

ரிலாக்ஸ் டைம்: கேழ்வரகு இனிப்பு அடை!

2 நிமிட வாசிப்பு

ரிலாக்ஸ் டைம்: கேழ்வரகு இனிப்பு அடை!

வியாழன் 11 ஏப் 2019