மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 24 செப் 2020

புரொமோஷனில் புதுமை காட்டும் ‘வாட்ச் மேன்’!

புரொமோஷனில் புதுமை காட்டும் ‘வாட்ச் மேன்’!

ஜி.வி.பிரகாஷ் சமீபகாலமாக தொடர்ந்து சமூக பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்துவருகிறார். இந்நிலையில் அவர் நடிப்பில் வெளியாகவுள்ள வாட்ச் மேன் திரைப்படத்தின் புரொமோஷனுக்காக எடுக்கப்பட்ட முயற்சியும் நல்லெண்ண அடிப்படையிலேயே அமைந்துள்ளது.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில் பிப்ரவரி மாதம் பொள்ளாச்சி பாலியல் விவகாரம் பரபரப்பைக் கிளப்பியது. இருநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்தது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்து தரப்பிலும் எடுக்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் வாட்ச் மேன் படக்குழுவினர் சார்பில் பொள்ளாச்சிக்கு 50 சிசிடிவி கேமராக்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன. இக்கேமராக்கள் நகரின் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் குற்றவாளிகளை எளிதாக பிடிக்கமுடியும். மேலும் குற்றச் செயல்களில் ஈடுபடுவர்களின் எண்ணிக்கையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சம்யுக்தா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ள வாட்ச் மேன் படத்திற்கு நிரவ் ஷா, சரவணன் ராமசாமி இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். அருண்ராஜா காமராஜ் பாடல்கள் எழுத ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். அருண்மொழி பிரகாசம் தயாரிக்கிறார்.

வியாழன், 11 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon