மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 6 ஆக 2020

திமுக ஆதரவு: கரு. பழனியப்பன் விளக்கம்!

திமுக ஆதரவு: கரு. பழனியப்பன் விளக்கம்!

இயக்குநர் கரு. பழனியப்பன் திமுக மற்றும் அதன் கூட்டனி கட்சிகளுக்கு ஆதரவாக தேர்தலில் பிரச்சாரம் செய்வது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார்.

டி.வி. மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பேசி வரும் கரு. பழனியப்பன், தற்போது நேரடி அரசியல் களத்திலும் இறங்கி, மக்களவைத் தேர்தலையொட்டி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் வி.சி.க வேட்பாளர் திருமாவளவன், மதுரை தொகுதியில் போட்டியிடும் சு.வெங்கடேசன், பின் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழி ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இது சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கனிமொழிக்கு ஆதரவாக தூத்துக்குடியில் கரு. பழனியப்பன் பேசியதன் மூலம் விமர்சனங்கள் எழுந்தன. திரையுலகைச் சேர்ந்த நடிகை கஸ்தூரி, “கடைசியில கரு பழனியப்பன் திமுகவா.... நான் கூட சிவப்பு சிந்தனையாளர், சு.வெ க்கு மட்டும் பிரச்சாரம் பண்ணுறாருனு முதல்ல நினைச்சேன்... ஆனா எல்லாருக்கும் பண்ணுறாரு போல. குடும்ப டிவில ஒரு ப்ரோக்ராம் பார்சல் !” என்ற ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக தி இந்து இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், ''இணையத்தில் வரும் அனைத்து கருத்துகளையும் கவனிக்கிறேன். எந்தவொரு வேலை செய்ய வெளியே வந்தாலும் எதிர் கருத்து வரத்தான் செய்யும். எந்த வேலை செய்தால் எதிர் கருத்து வராது சொல்லுங்கள். எதிர் கருத்து வராமல் இருக்க வேண்டும் என்றால் வேலை செய்யாமல் இருக்க வேண்டும். அக்கருத்துக்களை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை'' என்று கரு.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

வியாழன், 11 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon