மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 10 ஆக 2020

வாக்குச்சாவடிகளில் விளம்பரப் பலகைகள்: மனு தள்ளுபடி!

வாக்குச்சாவடிகளில் விளம்பரப் பலகைகள்: மனு தள்ளுபடி!

வாக்குக்கு பணம் வாங்குவது தண்டனைக்குரிய குற்றம் என அனைத்து வாக்குச் சாவடிகள் முன்பும் விளம்பரப் பலகைகள் வைக்கக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

வழக்கறிஞர் சூரியபிரகாசம் வாக்குக்குப் பணம் வாங்குவது தண்டனைக்குரிய குற்றம் என்ற விழிப்புணர்வைப் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டுமென்று கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்றைத் தாக்கல் செய்தார். பூந்தமல்லியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக முதலமைச்சர் தமிழக அரசு அறிவித்த 2,000 ரூபாய் பணம் தேர்தலுக்குப் பின்பு வழங்கப்படும் என்று தெரிவித்தது மறைமுகமாகத் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களை மிரட்டுவதற்குச் சமம் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

“தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் வாக்குகளைப் பெற வாக்காளர்களுக்குச் சட்டவிரோதமாகப் பணம் வழங்குவது தேர்தல் நடைமுறையைக் கேலிக்கூத்தாகிவிடும். தமிழகம் முழுவதும் வாக்கு சேகரிக்கச் செல்லும் வேட்பாளர்கள் தங்களுக்கு ஆரத்தி எடுக்கும் வாக்காளர்களுக்கு ஒவ்வொரு முறையும் 500 ரூபாய் பணமாக வழங்குகின்றனர். இது தேர்தல் ஆணையத்துக்கு தெரிந்தே நடைபெறுகிறது. வாக்குக்குப் பணம் கொடுப்பதும் பெறுவதும் தண்டனைக்குரிய குற்றம் என அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விளம்பரப் பலகைகள் வைக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று சூரியபிரகாசம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இன்று (ஏப்ரல் 11) இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதேபோன்ற கோரிக்கைகளுடன் கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் பணப்பட்டுவாடாவைத் தடுப்பதற்கும், பணப்பட்டுவாடா குறித்த புகார்களில் தேர்தல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பது குறித்தும் அறிவுறுத்தல்கள் வழங்கியிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர் நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும், துண்டறிக்கைகள் வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வியாழன், 11 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon