மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 10 ஏப் 2019

அருள்நிதியின் அடுத்த அப்டேட்!

அருள்நிதியின் அடுத்த அப்டேட்!

அருள் நிதி நடிப்பில் வெளியாகியுள்ள பல படங்கள் த்ரில்லர் ஜானரில் உருவாகிய நிலையில் தற்போது மண் சார்ந்த கதைகள் பக்கம் திரும்பியுள்ளார்.

தென் மாவட்ட கிராமம் ஒன்றின் பின்னணியில் உருவான வம்சம் திரைப்படம் மூலம் அருள்நிதி கதாநாயகனாக அறிமுகமானாலும் அவருக்கு கவனம் பெற்றுத் தந்த படங்களான டிமான்டி காலனி, மௌனகுரு ஆகியவை த்ரில்லர் பாணியில் உருவாகியிருந்தன. வம்சம் போல மண் சார்ந்த கதை அவருக்கு அமையாமல் இருந்த நிலையில் தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

சுந்தர் தனது டைம் லைன் சினிமாஸ் மூலம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக இணைந்துள்ளார். படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிக்கும் நாயகி, மற்ற நடிகர், நடிகைகள், இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகவுள்ளன.

சீனு ராமசாமி இயக்கத்தில் சமீபத்தில் கண்ணே கலைமானே வெளியான நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் மாமனிதன் படத்தின் பணிகளில் அவர் கவனம் செலுத்திவருகிறார்.

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்திற்குப் பிறகு அருள்நிதி பரத் நீலகண்டன் இயக்கும் கே-13 படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு ஜோடியாக நடிக்கிறார். ராஜ சேகர் இயக்கத்தில் ஜீவாவுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

புதன், 10 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon