மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 10 ஏப் 2019

சசிகுமார்: மீண்டும் ஓர் ஆக்‌ஷன் த்ரில்லர்!

சசிகுமார்: மீண்டும் ஓர் ஆக்‌ஷன் த்ரில்லர்!

சசிகுமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று (ஏப்ரல் 10) தொடங்குகிறது.

சசிகுமார் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பேட்ட திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. ரஜினியின் நண்பராக அந்தப் படத்தில் சசிகுமார் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து நாடோடிகள் 2, கொம்புவச்ச சிங்கம்டா, கென்னடி கிளப், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்கள் அவரது நடிப்பில் தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் சலீம் படத்தை இயக்கிய என்.வி.நிர்மல் குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்குகிறது. கல்பதரு பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக இந்தப் படம் உருவாகிறது.

ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் சசிகுமாருடன் இணைந்து நடிக்கும் நாயகி, மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

சலீம் படத்தைத் தொடர்ந்து நிர்மல் குமார், அரவிந்த் சாமி, த்ரிஷாவைக் கதாநாயகனாகக்கொண்டு சதுரங்கவேட்டை 2 படத்தை இயக்கினார். படத்தின் பணிகள் நிறைவடைந்த போதிலும் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. முன்னதாக சம்பளப் பாக்கி வைத்துள்ளதாக அரவிந்த் சாமி, தயாரிப்பாளர் மனோ பாலா மீது வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புதன், 10 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon