மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 21 செப் 2020

ஆதித்யா வர்மா: வதந்திகளை மறுத்த படக்குழு!

ஆதித்யா வர்மா: வதந்திகளை மறுத்த படக்குழு!

அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கான கபீர் சிங் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி கவனம் பெற்றுவருகிறது. ஆனால், தமிழ் ரீமேக் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நிலவுவதாகக் கூறப்பட்டுவந்த நிலையில் அதன் தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் உள்ளிட்டோர் நடித்த அர்ஜுன் ரெட்டியின் ரீமேக்குக்கு வர்மா என்று தலைப்பிடப்பட்டது. தயாரிப்பு நிறுவனத்துக்கும், பாலாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினைகளால் படம் கைவிடப்பட்டது. தற்போது கிரீசாயா இயக்கத்தில் ஆதித்யவர்மா என்ற தலைப்பில் படம் உருவாகிவருகிறது. துருவ் கதாநாயகனாக நடிக்க, பனிதா சந்து கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ப்ரியா ஆனந்த் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில் இந்தப் படமும் கைவிடப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. படத்தின் ரீமேக் பணிகளைக் கைவிட்டு, அர்ஜுன் ரெட்டி படத்தைத் தமிழில் டப்பிங் செய்துவெளியிடலாம் என்றும் கூறப்பட்டது. இதைப் படக்குழு முற்றிலுமாக மறுத்துள்ளது.

இதற்குப் பதிலளித்துள்ள தயாரிப்பாளர் மேத்தா, “இதுபோன்ற பொய்யான தகவல்களைத் தருபவர்களுக்கு ஏமாற்றம் தருகிறோம், மன்னித்துவிடுங்கள். படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஒரு பாடல் படப்பிடிப்புக்காக குழு 9ஆம் தேதி போர்ச்சுகல் செல்கிறது. ஜூலை 2019 படம் வெளியாகும்” என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon