மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 25 மா 2019

மனநலம் பாதிக்கப்பட்டவர்: அரசியல்வாதிகளுக்குத் தடை?

மனநலம் பாதிக்கப்பட்டவர்: அரசியல்வாதிகளுக்குத் தடை?

மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதைக் குறிப்பிடும் வகையில் நேரடி வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சிக்க அரசியல்வாதிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திடம் இந்திய மனநல மருத்துவர்கள் அமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தலும், 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலும் நடக்கவிருக்கின்றன. இதை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், இந்திய மனநல மருத்துவர்கள் அமைப்பு சார்பில் தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. அதில், அரசியல்வாதிகள் பிரச்சாரத்தில் ஈடுபடும்போது எதிர் அணியினரை விமர்சிப்பதற்காக மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதைக் குறிப்பிடும் நேரடி வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துகின்றனர். இது ஏற்கனவே மனநல பாதிப்பில் இருப்பவர்களை அவமதிக்கும் வகையில் இருக்கிறது. அதனால், தேர்தல் பிரச்சாரத்தின்போது மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதைக் குறிப்பிடும் நேரடி வார்த்தையைப் பயன்படுத்தத் தடை விதித்து, இதனைத் தேர்தல் நடத்தை விதிகளில் ஒன்றாகச் சேர்க்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

திங்கள், 25 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon