மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

தற்கொலைக்கு முயன்ற காவலர் உயிரிழப்பு!

தற்கொலைக்கு முயன்ற காவலர் உயிரிழப்பு!

நீதிபதி வீட்டில் பாதுகாப்புப் பணியின்போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற காவலர் சிகிச்சை பலனின்றி நேற்று (மார்ச் 23) உயிரிழந்தார்.

சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் ஆயுதப் படை காவலராகப் பணிபுரிந்தவர் சரவணன். இவர் மார்ச் 20ஆம் தேதி அடையாறில் உள்ள நீதிபதி முரளிதரன் வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென்று துப்பாக்கியால் தன்னைச் சுட்டு கொல்ல முயற்சி செய்தார். இதில் பலத்த படுகாயமடைந்த சரவணனை அங்குள்ள சக காவலர்கள் மீட்டு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுதொடர்பாக கடிதம் ஒன்றையும் போலீசார் கண்டுபிடித்தனர். அதில், “என்னுடைய சாவுக்கு யாரும் காரணமில்லை. நான் இறந்த பிறகு என் காக்கி சட்டையைக் கழற்றக் கூடாது. அதோடுதான் என்னைப் புதைக்க வேண்டும் அல்லது எரிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரவணன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஞாயிறு, 24 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon