மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

ஐபிஎல்: கடும் போட்டியில் கொல்கத்தா!

ஐபிஎல்: கடும் போட்டியில் கொல்கத்தா!

ஐபிஎல் தொடர் நேற்று முதல் சென்னையில் தொடங்கியது. முதல் போட்டியில் பெங்களூர் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதையடுத்து இரண்டாவது போட்டி கொல்கத்தாவில் இன்று மாலை 4 மணியளவில் தொடங்கியது.

கொல்கத்தா அணிக்கும், ஹைதராபாத் அணிக்கும் இடையேயான இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் உள்ளார். புவனேஷ்வர் குமார் தலைமையில் முதலில் பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளுக்கு 181 ரன்களை குவித்தது.

இதைத்தொடர்ந்து பேட்டிங்கில் இறங்கிய கொல்கத்தா அணி 10.4 ஓவர்களுக்கு 79 ரன்களை குவித்தது. நிதிஷ் ராணா, ராபின் உத்தப்பா கூட்டணி 43 பந்துகளில் 50 ரன்களை குவித்தது. ஆனால் ரன் ரேட் 10க்கும் மேல் அதிகரித்துவிட்டதால் கொல்கத்தா அணிக்கு போட்டி கடுமையாகிவிட்டது.

இதையடுத்து மும்பை அணிக்கும், டெல்லி அணிக்கும் இடையேயான போட்டி 8 மணியளவில் தொடங்கவுள்ளது.

ஞாயிறு, 24 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon