மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 5 ஜுன் 2020

பணக்காரர்களுக்கு மட்டுமே உழைக்கும் காவலாளிகள்: பிரியங்கா காந்தி

பணக்காரர்களுக்கு மட்டுமே உழைக்கும் காவலாளிகள்: பிரியங்கா காந்தி

மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அனைவரும் தங்களை சவுகிதார் (காவலாளி) என்று அழைத்து வருகின்றனர். மேலும், பாஜக தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தங்களது பெயருக்கு முன்பு ‘சவுகிதார்’ என்ற வார்த்தையை இணைத்துள்ளனர். மறுபுறம், சவுகிதார் என்ற வார்த்தையை பாஜக எதிர்ப்பாளர்கள் ஏறத்தாழ கேலிச் சொல்லாக்கிவிட்டனர்.

இந்நிலையில், சவுகிதார்கள் பணக்காரர்களுக்கு மட்டுமே உழைப்பதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.10,000 கோடி தொகை வழங்கப்படாமல் இன்னும் நிலுவையில் இருப்பதாக அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையை சுட்டிக்காட்டி, யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி மாநில அரசை பிரியங்கா காந்தி கடுமையாக சாடினார்.

இதுபற்றி பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “கரும்பு விவசாயிகளின் குடும்பங்கள் இரவு பகலாக உழைக்கின்றன. ஆனால் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகையை வழங்காமல் உ.பி அரசு பொறுப்பில்லாமல் செயல்படுகிறது. இந்த ரூ.10,000 கோடி வழங்கப்படாவிட்டால் விவசாயிகளின் குழந்தைகளுக்கான கல்வி, உணவு, சுகாதாரம் ஆகியவை கேள்விக்குறியாகிவிடும்.

மேலும் அடுத்த சாகுபடிக்கு தேவையான நிதி ஆதாரம் அவர்களிடம் இருக்காது. இந்த சவுகிதார்கள் அனைவரும் பணக்காரர்களுக்காக மட்டுமே உழைக்கின்றனர். ஏழைகளை பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை” என்று தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 24 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon