மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 30 மே 2020

சினி டிஜிட்டல் திண்ணை: இந்தியன் 2 - ஒரே நம்பிக்கை!

சினி டிஜிட்டல் திண்ணை: இந்தியன் 2 - ஒரே நம்பிக்கை!

ஆன்லைன் வந்து காத்திருந்த வாட்ஸ் அப்புக்கு, மும்பையிலிருந்து பதிவு செய்யப்பட்ட ஸ்டேட்டஸை ஷேர் செய்தது ஃபேஸ்புக். அந்த போஸ்டிலிருந்ததைப் படிக்கத் தொடங்கியது வாட்ஸ் அப். “எங்கள் புதிய பட வேலைகளைத் தொடங்கிவிட்டோம். சில மாதங்கள் முன்பே தொடங்கியிருக்கவேண்டிய இந்த புராஜெக்டை தாமதமாகத் தொடங்குவதால், விரைந்து முடித்துவிடுவோம்” என்று அந்த ஸ்டேட்டஸில் கூறப்பட்டிருந்தது. இப்போது இந்த ஸ்டேட்டஸை ஷேர் செய்வதன் காரணமென்ன என்று கேட்ட வாட்ஸ் அப்புக்கு ஸ்டேட்டஸ் ஒன்றை டைப் செய்யத் தொடங்கியது ஃபேஸ்புக்.

“கமலின் இந்தியன் 2 திரைப்படத்துக்காக மும்பையிலிருந்து வந்த டீம் தான் மேலே ஷேர் செய்யப்பட்டிருக்கும் ஸ்டேட்டஸை பதிவு செய்தது. இந்தியன் 2 படத்துக்காக ஹாலிவுட் தரத்தில் வேலைகளை செய்ய, மும்பையிலிருந்து வரவழைக்கப்பட்ட லைட் டிபார்ட்மென்ட் தான் இவர்கள். பல லட்சம் மதிப்புள்ள பொருட்களுடன் சென்னை வந்திருந்த அவர்களை, இங்கிருந்து கிளம்பிச் செல்லுமாறு கூறிவிட்டதாம் படக்குழு. அதனால் ஊருக்குத் திரும்பியவர்கள், தங்களது அடுத்த பட புராஜெக்டை தொடங்கிவிட்டார்கள். அவர்களைப் போலவே படக்குழுவில் வேலை செய்த கலைஞர்கள் பலரும் அடுத்தடுத்த வேலையைப் பார்க்க போய்விட்டார்கள். கமல் அரசியலில் முழு வீச்சில் ஈடுபடுவதால், படத்துக்கு ஒரு பிரேக் விட்டிருப்பதாகவே முதலில் நினைக்கப்பட்டது. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல படக்குழுவில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக கழட்டிவிடப்பட்டதால் செம அப்செட்டில் இருக்கின்றனர். ஹாலிவுட் அளவில் கொண்டு செல்லப்படும் படமாக இருக்கும் என்பதால், இதில் வேலை செய்தவர்களுக்கு நல்ல பேமெண்டும் கொடுக்கப்பட்டது. ஆனால், அதெல்லாம் கிடையாது என்றாகிவிட்டதால், பட யூனிட்களும் சோர்வடைந்துவிட்டனர். கமலின் சம்பளத்துக்கு ஈடான செலவு படத்துக்காக செய்யப்பட்டுவிட்டது. ஆனால், இதையெல்லாம் அவரிடம் சொல்லமுடியாத நிலையில் இருக்கிறது லைகா. எந்திரன் 2 படத்தின்போது ரஜினிக்காக ஷூட்டிங்கை நிறுத்தியது போலவே, இந்தியன் 2 படத்துக்கும் ஷூட்டிங் நிறுத்தப்பட்டிருப்பதால் தயாரிப்பாளர் தரப்பிலும் எதுவும் கேட்கமுடியவில்லை. இப்படிப்பட்ட பிரேக் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கும் என அக்ரிமெண்டிலேயே குறிப்பிட்டிருப்பதால் கமலுக்காக காத்திருப்பதைத் தவிர வேறு வழி இல்லை. ஆனால், இந்தியன் 2 படத்துக்கான ஏற்பாடுகள் ஒவ்வொன்றாகக் கழன்று கொண்டிருப்பதால், மீண்டும் இந்தப் படம் உயிர்பெறுவதற்கான சாத்தியக்கூறுகளையே காண முடியவில்லை என்கின்றனர் படக்குழுவினர். கோகுலம் ஸ்டூடியோஸில் இந்தப் படத்துக்காக வடிவமைக்கப்பட்ட பிரமாண்ட செட் ஒன்று மட்டுமே, இந்தப் படத்துக்கான ஒரே நம்பிக்கையாக இருக்கிறது” என்ற ஸ்டேட்டஸை போஸ்ட் செய்துவிட்டு லாக் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

ஞாயிறு, 24 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon