மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 5 ஜுன் 2020

ஐபிஎல்: டெல்லியை எதிர்காணும் மும்பை!

ஐபிஎல்: டெல்லியை எதிர்காணும் மும்பை!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நேற்று (மார்ச் 23) முதல் துவங்கியது. நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 17.1 ஓவருக்கு 70 ரன்களை குவித்தது. பிறகு பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவருக்கு 7 விக்கெட் வித்தியாசத்தில் 71 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.

இதையடுத்து இன்று மாலை 4 மணிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், சன் ரைசர்ஸ் ஹதராபாத் அணிக்கும் போட்டி நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து 8 மணிக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையே போட்டி நடைபெறவுள்ளது.

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், ஷ்ரெயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையேயான போட்டியை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஞாயிறு, 24 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon