மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

பனையின் மூலம் சென்னையை மீட்கும் போராட்டம்!

பனையின் மூலம் சென்னையை மீட்கும் போராட்டம்!

‘பனை’ சதீஷுடன் ஓர் உரையாடல் – நரேஷ்

பனை பனை என்று பலர் போற்றி,

பனை ஒன்று மட்டுமல்ல,

தமிழும் நமக்குப் புகழ் தருவதுவே

என்று கபிலர் பாடினார். இன்று கபிலரைப் போன்ற புலவர்கள் இருந்திருந்தால் பனை மரம் குறித்துப் பாடியிருப்பார்கள். ஏனென்றால் பனை குறித்து போதிக்க வேண்டிய தேவை இக்காலத்தில் மிகுதியாக எழுந்திருக்கிறது.

தேவையான சமயத்தில் தேவையானவற்றைப் பாடுவது புலவர் மரபு. திருவள்ளுவர் எக்காலத்துக்குமான தேவையைப் பூர்த்தி செய்திருக்கிறார். தோன்றிய சித்தர்களும் புலவர்களும் தத்தமது காலங்களின் தேவைகளைப் பாடிச் சென்றனர். அக்காலத்தில் ‘இயற்கை பேணல்’ குறித்து எந்தப் புலவரும் பாடவில்லை. ஏனென்றால் அப்போது இயற்கை பேண வேண்டிய தேவையே இருந்ததில்லை. நீர்நிலைகளும் இயற்கையும் இருந்தன. அதனூடாக மனிதர்கள் வாழ்ந்தார்கள்.

‘பனை’ சதீஷுடன் ஓர் உரையாடல் – நரேஷ்

பனை பனை என்று பலர் போற்றி,

பனை ஒன்று மட்டுமல்ல,

தமிழும் நமக்குப் புகழ் தருவதுவே

என்று கபிலர் பாடினார். இன்று கபிலரைப் போன்ற புலவர்கள் இருந்திருந்தால் பனை மரம் குறித்துப் பாடியிருப்பார்கள். ஏனென்றால் பனை குறித்து போதிக்க வேண்டிய தேவை இக்காலத்தில் மிகுதியாக எழுந்திருக்கிறது.

தேவையான சமயத்தில் தேவையானவற்றைப் பாடுவது புலவர் மரபு. திருவள்ளுவர் எக்காலத்துக்குமான தேவையைப் பூர்த்தி செய்திருக்கிறார். தோன்றிய சித்தர்களும் புலவர்களும் தத்தமது காலங்களின் தேவைகளைப் பாடிச் சென்றனர். அக்காலத்தில் ‘இயற்கை பேணல்’ குறித்து எந்தப் புலவரும் பாடவில்லை. ஏனென்றால் அப்போது இயற்கை பேண வேண்டிய தேவையே இருந்ததில்லை. நீர்நிலைகளும் இயற்கையும் இருந்தன. அதனூடாக மனிதர்கள் வாழ்ந்தார்கள்.

ஆம், இந்தப் பிறந்த நாளை நான் சிறந்த நாளாகவே கருதுகிறேன். உன்னாலே எனக்கு மறக்க முடியாத பல உறவுகள், பல அனுபவப் பாடங்கள், பல பயணங்கள். அனைத்தும் உன்னாலே உன்னாலே, ஆயினும் ஆண்டுகள் பல கடந்தாலும் உன் முன் இன்றும் நான் புதியவனாய் உணர்கிறேன், நாள் தோறும் உன்னுள் என்னைப் புதைத்துக்கொள்கிறேன்.

என் வாழ்வும் என் பயணமும் என்றும் உன்னுடனே.

பனை நாள்!

- தன் பிறந்தநாளைப் பனைக்கான நாளாகக் கொண்டாடிய ஒரு இளைஞரின் முகநூல் பதிவிது. அந்த இளைஞரின் பெயர் சதீஷ். சதீஷ் என்றால் யாருக்கும் தெரியாது. ‘பனை’ சதீஷ் என்றால்தான் தெரியும். ‘பனை’ எனும் செல்வத்தைத் தன் அடையாளமாகவே மாற்றிக்கொண்டு, அதைத் தமிழகத்தின் அடையாளமாகவும் மாற்றத் துடிக்கும் இந்த இளைஞருடன் உரையாடக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது.

தனியார் நிறுவனத்தில் இரவு நேரப் பணிபுரிந்துகொண்டே, கிடைக்கும் நேரத்தைப் பனை மீட்புக்கு மட்டுமே பயன்படுத்திவருகிறார். காலையிலிருந்து மதியம்வரை அவரைத் தொலைபேசியில் பிடிக்க முடியாது. இரவு நேர உழைப்பின் விளைவு அது. ஆனால் பனை தொடர்பான செயல்பாடுகள் நடக்கும் வேளையில் எந்நேரமும் அவரைத் தொடர்புகொள்ளலாம்.

பனை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மிக நீண்ட மிதிவண்டிப் பயணம் முடித்து வந்திருக்கிறார். இவருடைய நண்பர்கள், நட்புக் குழுக்கள் மூலம் எண்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பனை விதைகளை விதைத்திருக்கிறார்.

சென்னையின் மறுபக்கம்

“நம்மில் எத்தனை பேர் சென்னையின் முழுமையான சூழலியல் கட்டமைப்பைப் புரிந்துகொண்டுள்ளோம்?

சென்னையின் கொற்றலை ஆற்றின் அழிவு பற்றித் தெரியுமா?

நாம் அறிந்திடாத நாம் பார்த்திடாத சென்னையின் மறுபக்கத்தைப் பற்றி உரையாடுவோம் வாருங்கள்.”

இது கடந்த 17ஆம் தேதி அவரது குழு முன்னெடுத்த பயணம். பெசன்ட் நகரிலிருந்து எண்ணூர் வரை சூழலியல் பயணம் மேற்கொண்டிருக்கின்றனர்.

இது போன்றவர்கள் வருங்காலத்துக்கு வழிசெய்பவர்கள். எனவே அவர்களுடைய குரல் பல திசைகளிலும் ஒலிக்கச்செய்ய வேண்டும் என்பதால் அவரைச் சந்தித்துப் பேசினேன். அந்த உரையாடலிலிருந்து…

அது ஏன் ’பனை’ என்பதை பெயரோடு சேர்த்து வெச்சிருக்கீங்க சதீஷ்?

பெயரோடு இல்லங்க, இதை மக்கள் கிட்ட கொண்டு போய் சேர்க்கணும் என்பதற்காக உயிரோடவே சேர்த்து வெச்சிருக்கேன். அது எல்லாருக்குமான அடையாளம். பனை மாதிரி வேற ஒரு செல்வத்தை கண்ணுல காட்டுங்க பாப்போம். தங்கம் , வெள்ளி, வைரத்தை விடவெல்லாம் சிறந்தது பனைதாங்க. தமிழர்கள், தொல்குடிகளோட வாழ்வியலோட இணைஞ்சு அவர்களுக்கான அடையாளமாகவும் இருப்பது பனை. அதைக் காப்பாத்த வேலை செய்யுறதே எனக்கு கிடைச்ச பெரிய பாக்கியம்தான!

நீங்க 80,000 பனை விதைகளை விதைச்சிருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன். தனிமனிதனால் இது சாத்தியமா?

80,000 ஆயிரம் என்பது சும்மா ஒரு கணக்குக்கு சொல்லலாம். ஆனா சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்ல மட்டுமே எண்பதாயிரத்துக்கும் மேற்பட்ட விதைகளை விதைச்சிருக்கோம். அது நான் தனிப்பட்ட முறையில பண்ணினது இல்ல. அது பெரிய கூட்டு முயற்சி. பல்வேறு அமைப்புகள், குழுக்களோட ஒருங்கிணைச்சு நானும் விதைச்சேன். அவ்வளவுதான்.

ஏன் சென்னையில்..?

அதிகமான இயற்கைச் சீற்றங்கள் ஏற்படுற பகுதியா சென்னை இருக்கு. நம்மோட அடுத்த தலைமுறை, அவங்களுக்கு அடுத்த தலைமுறையெல்லாம் இந்த நகரத்துல வாழணும்னா, இது நகரமா இருக்கணும். இங்கேயும் இயற்கைச் சூழல் இருக்கணும். அதற்காகத்தான் ’பனை’ எனப்படுகிற கற்பகத் தருவை இந்த சென்னை முழுமைக்கும் நாம விதைச்சிருக்கோம்.

பனைக்கும் இயற்கைச் சீற்றங்களுக்கும் தொடர்பு இருக்குனு நீங்க ஒருமுறை குறிப்பிட்டிருந்தீங்க. பனை இயற்கைச் சீற்றங்களிலிருந்து காப்பாற்றுமா?

பனை என்பதை நம்மோட முன்னோர்கள் வெறும் மரமாக மட்டும் பார்க்கல. அதிலிருந்து கிடைக்கக்கூடிய பொருட்கள், உணவு தயாரிப்புகள் - இவையெல்லாம் அவர்களுக்கு தற்காப்பு அரணாக இருந்துச்சு. நீங்க பாத்தீங்கன்னா வயல் வெளிகளைச் சுற்றியும், காடுகளைச் சுற்றியும், ஊர்களைச் சுற்றியும் பனை விதைச்சு வளர்த்திருப்பாங்க. காங்க்ரீட் வீடுகள் இல்லாத காலம் அது. குடிசை வீடுகள் பெரும்பான்மையா இருந்த காலம். இயல்பிலேயே காத்துலையும், வெள்ளத்துலையும் சிதைந்துபோற கட்டமைப்பு அது. அப்போ காத்தோட வேகத்தையும், வெள்ளத்தோட வேகத்தையும் கட்டுப்படுத்தணும்னு அவங்களுக்கு தெரிஞ்சது. காற்றின் வேகத்தை தடுத்து உள்வாங்கி, குறைத்து அனுப்பக்கூடிய ஏற்பாடு அவங்களுக்குத் தேவைப்பட்டுச்சு.

பனை மரங்கள் இயல்புலையே காற்றைக் கட்டுப்படுத்தக்கூடியவை. புயல் நேரங்கள்ல ஊரைச் சுத்தி இருக்க பனை மரங்கள்ல மோதி வலுவிழந்துதான் ஊருக்குள்ள காத்தடிக்கும். பனை மர வேர்கள் ரொம்ப ஆழமா செல்லக்கூடியவை. பனை விதைக்கப்பட்டா ஆறு மாசத்துக்கு அதோட வேர் மட்டும்தான் வளரும்னு சொல்லுவாங்க. அவ்வளவு உறுதியான வேர்கள், மணல் அரிப்பைத் தடுக்கும். மணல் அரிப்பைத் தடுத்து கரைகளை பலப்படுத்தவதன் மூலமா, வெள்ளத்தோட தாக்கத்தையும் பனை மரங்கள் மட்டுப்படுத்தும். அதற்குத்தான் அவர்கள் அந்த மரங்களையும் வளர்த்தாங்க.

இந்த மரங்கள் அழிஞ்சதோட விளைவைத்தான் நாம நேரடியா பாத்தோம். 2015ஆம் ஆண்டுல வந்த சென்னை வெள்ளத்தைப் பாத்தோம். வர்தா புயலையும் பாத்தோம். சென்னைல வெள்ளம் வந்தப்பதான் எனக்கு சென்னையே புரிஞ்சது. சென்னையோட நகரக் கட்டமைப்பு பிடிப்பட்டது. இப்படியே போச்சுன்னா சென்னைல மக்கள் வாழ முடியாம போயிடும். அப்போதான் சென்னை இப்படியே இருக்கணுமா? இல்ல மக்கள் வாழக்கூடிய நகரமா இருக்கணுமான்னு எனக்குள்ள ஒரு கேள்வி எழுந்தது. அந்தக் கேள்விக்கு பதிலாத்தான் என் செயல்பாடுகள் இருக்குன்னு நினைக்கிறேன்.

(இன்னும் பேச நிறைய இருக்கிறது…)

திங்கள், 25 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon