மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 30 மே 2020

தேசியவாதம் என்றால் பாரத் மாதா கி ஜெய் அல்ல: வெங்கையா நாயுடு

தேசியவாதம் என்றால் பாரத் மாதா கி ஜெய் அல்ல: வெங்கையா நாயுடு

டெல்லியில் இன்று (மார்ச் 24) துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், “தேசியவாதம் என்றால் பாரத் மாதா கி ஜெய் என்று அர்த்தமல்ல. ஜாதி, மதம், நகரம், கிராமம் என்ற அடிப்படையில் நீங்கள் மக்களை பிரித்தால் நீங்கள் பாரத் மாதா கி ஜெய் என்று சொல்வதில் அர்த்தமில்லை. ஊழல், கல்வியின்மை, அச்சம், பசி, ஜாதிய பாகுபாடுகள் போன்றவை இல்லாத புதிய இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

பாரம்பரியத்தை பாதுகாக்கவும், எதிர்மறையான விஷயங்களை அழிக்கவும், நேர்மறையான சிந்தனையை மேம்படுத்திக்கொள்ளவும், சமூகத்தில் நேர்மையாகவும், அன்பையும், அமைதியையும் விரும்புவராக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். சமூக கொடுமைகள், பாகுபாடுகளை எதிர்த்து பாலின சமத்துவத்தையும், ஒற்றுமையையும் ஊக்குவிப்பதில் நீங்கள் முன்னிலையில் நின்று போராட வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாக 7 விழுகாட்டுக்கும் மேலான விகிதத்தில் இந்தியா வளர்ச்சியடைந்து வருகிறது. அடுத்த 10-15 ஆண்டுகளில் உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கவுள்ளது. ஒற்றுமையான, வளமான புதிய இந்தியாவை கட்டமைத்து, ராம ராஜ்ஜியத்தை வரவேற்க ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும்” என்று கூறினார்.

ஞாயிறு, 24 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon