மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

தந்தையின் தொகுதியில் போட்டியிடும் அகிலேஷ் யாதவ்

தந்தையின் தொகுதியில் போட்டியிடும் அகிலேஷ் யாதவ்

வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு உத்தரப் பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இந்நிலையில், உ.பி முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் ஆசம்கர் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சி இன்று அறிவித்துள்ளது. இத்தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக அகிலேஷ் யாதவ்வின் தந்தை முலாயம் சிங் யாதவ் பொறுப்பு வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அண்மையில் அறிவித்திருந்தார். முதல்முறையாக கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் போட்டியிடவுள்ளார். 2009ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் கன்னோஜ் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் அகிலேஷ். அதன்பின்னர் 2012ஆம் ஆண்டில் உ.பி முதல்வராக பொறுப்பேற்றார்.

2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்றாலும் கூட ஆசம்கர் தொகுதியில் 63,000 வாக்கு வித்தியாசத்தில் முலாயம் சிங் யாதவ் வெற்றி பெற்றார். இத்தொகுதியில் கணிசமான எண்ணிக்கையில் இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர். அவர்களது ஆதரவு சமாஜ்வாதி கட்சிக்கு இருப்பது வெற்றிக்கு சாதகமாக அமைந்துள்ளது.

ஞாயிறு, 24 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon