மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 29 நவ 2020

த்ரில்லரில் மிரட்டும் நயன்

த்ரில்லரில் மிரட்டும் நயன்

நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

உன்னைப்போல் ஒருவன், பில்லா 2 ஆகிய படங்களை இயக்கியவர் சக்ரி டோலெட்டி. இவர் இயக்கியுள்ள கொலையுதிர் காலம் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் பிரதாப் போத்தன், பூமிகா, ரோகிணி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எட்செட்டெரா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் வி.மதியழகன் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். பின்னர் படத்தின் ரிலீஸ் ஜனவரிக்குத் தள்ளிவைக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் ஜனவரியிலும் வெளியாகவில்லை. படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்த நிலையில், படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லரில் வரும் அனைத்து காட்சிகளுமே வெளிநாடுகளில் படம்பிடிக்கப்பட்டுள்ளன. காட்சியமைப்புகளைப் பார்க்கையில் முழு கதைக்களமுமே வெளிநாட்டில் நகர்வதாகத் தெரிகிறது. படம் த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. மே அல்லது ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொலையுதிர் காலம் ட்ரெய்லர்

ஞாயிறு, 24 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon