மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 19 நவ 2019

பொள்ளாச்சி சம்பவம்: கோவை எஸ்பி மீது வழக்கு பதிய மனு!

பொள்ளாச்சி சம்பவம்: கோவை எஸ்பி மீது வழக்கு பதிய மனு!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி பெயரை வெளியிட்ட கோவை எஸ்பி, உள்துறை செயலாளர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களிடம் நட்பாகப் பழகி, அவர்களை பாலியல் வன்முறைக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி பெயரை வெளியிட்ட கோவை எஸ்பி, உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதில், பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை வெளியிடுவது குற்றம், அந்தக் குற்றத்துக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாருக்கு ஆளாகியிருக்கும் இருவரும் உயர் அதிகாரிகள் என்பதால் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்ய மாட்டார்கள். அதனால், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை திங்கட்கிழமை (மார்ச் 25) நடைபெறும்.

ஞாயிறு, 24 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon