மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 23 மா 2019

ஸ்டாலின் பிரச்சாரம்: புறக்கணித்த முல்லை வேந்தன் -தர்மபுரி சலசலப்பு!

ஸ்டாலின் பிரச்சாரம்: புறக்கணித்த முல்லை வேந்தன் -தர்மபுரி சலசலப்பு!

தர்மபுரி திமுகவில் ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தவரும் முன்னாள் அமைச்சருமான முல்லை வேந்தன் தற்போது தனது தோட்ட வீட்டில் வாடிக் கொண்டிருக்கிறார்.

இடையே கொஞ்ச காலம் திமுக தலைமை மீதுள்ள விரக்தியால் தேமுதிகவுக்குப் போன முல்லை வேந்தன் மீண்டும் திமுகவுக்கே திரும்பினார். முல்லையோடு மு.க. அழகிரி பேசிக்கொண்டிருக்கிறார் என்ற தகவல் கிடைத்த நிலையில் தான் துரைமுருகனும், முரசொலி செல்வமும் அவரிடம் பேசி திமுகவுக்கு திரும்பவும் கொண்டுவந்தார்கள்.

சில மாதங்களாகச் சுறுசுறுப்பாக இருந்த முல்லை வேந்தன் தேர்தல் நேரத்தில் ஏன் டல்லாகிவிட்டார் என தர்மபுரி திமுக வட்டாரத்தில் பேசினோம்.

“ சில வாரங்களுக்கு முன்பு திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்திருக்கிறார் முல்லை. ‘உங்களை பார்த்து ஆசி வாங்கிட்டு சீட் கேட்டு பணம் கட்டலாம்னு வந்தேன்’ என்று முல்லை வேந்தன் சொன்னதும், எடுத்த எடுப்பிலேயே...‘நீங்க உறுப்பினர்தானே, போயிட்டு வேலுவை பாருங்க’ என்று நோஸ்கட் செய்துவிட்டார் ஸ்டாலின்.

வெளியே வந்தவர் எங்கேபோவது என்று தெரியாமல் துரைமுருகன் வீட்டுக்குச் சென்று அவரைப் பார்த்து, ‘அண்ணே நான் அவசரப்பட்டு வந்து சேர்ந்துட்டேனோனு தோணுது’ என்று வருத்தப்பட்டிருக்கிறார். அதற்கு துரைமுருகன், ‘ ‘தலைவர் வழி வேறு இவர் வழிவேறு ’ என்று சமாதானப்படுத்தியுள்ளார்” என்று கூறினார்கள்.

அதன் பின் சென்னையில் இருந்து தர்மபுரி திரும்பிய முல்லை வேந்தன் தனது ஆதரவாளர்களைச் சந்தித்து சூடாகப் பேசியிருக்கிறார். ‘கலைஞர் வேறு, ஸ்டாலின் வேறு. செந்தில்பாலாஜி அதிமுகவுலேர்ந்து வந்தாரு, அவருக்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவி கொடுக்குறாரு. நான் தேமுதிகவுல இருந்து வந்தாலும் அடிப்படையில திமுக காரன், முன்னாள் அமைச்சரும் கூட. ஆனா எனக்கு உறுப்பினர் கார்டுதான் கொடுக்குறாரு. பணம் இருக்கிறவங்களை மதிக்குறாரு. இல்லேன்னா கேவலப்படுத்துறாரு’ என்று புலம்பியிருக்கிறாராம் முல்லை வேந்தன்.

இதன் எதிரொலியாக மார்ச் 22, 23 தேதிகளில் தர்மபுரிக்கு ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு வந்தபோது முல்லைவேந்தன் கூட்டத்துக்கு வரவில்லை.

“எங்க அண்ணன் சார்ந்த கொங்கு வேளாளர் சமுதாயத்துக்கு தர்மபுரி தொகுதியில் 2 லட்சம் ஓட்டுகள் உள்ளன. அதில்லாமல் அவருடைய ஆதரவாளர்களும் பல சமூகத்திலிருக்கிறார்கள். அதனால் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் முல்லை வேந்தன் வீட்டை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்” என்றும்சொல்கிறார்கள் முல்லையின் நெருங்கிய வட்டாரத்தில்.

தர்மபுரி மக்களவை தொகுதிக்கான வேட்பாளர் செந்தில்குமார், அரூர் சட்டமன்ற வேட்பாளர் கிருஷ்ணகுமார், பாப்பிரெட்டி வேட்பாளர் மணி ஆகிய திமுக வேட்பாளர்கள் முல்லைவேந்தனை சந்தித்து வாழ்த்து பெற்று வந்திருக்கிறார்கள்.

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

சனி 23 மா 2019