மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 15 ஆக 2020

ஆளுநராக இருக்கக்கூடிய கவர்னர் அவர்களே: அப்டேட் குமாரு

ஆளுநராக இருக்கக்கூடிய கவர்னர் அவர்களே: அப்டேட் குமாரு

நம்ம சும்மா இருந்தாலும் நம்ம வாய் சும்மா இருக்க மாட்டிக்குன்னு வடிவேலு சொல்வாரே அது யாருக்கு மேட்ச் ஆகுதோ இல்லையோ அப்படியே ஸ்டாலினுக்கு மேட்ச் ஆகுது. வாய் புளிச்சது, மாங்கா புளிச்சதுலாம் முடிஞ்சு இப்ப வித்தியாசமான ரைமிங்குல இறங்கியிருக்காரு. பரீட்சையில பசங்க படிச்சுட்டு போன கேள்வி வராம வேற கேள்வி வரும் போது படிச்ச கேள்விக்கான பதிலை எழுதி மேலேயும், கீழேயும் கேள்வியைவே சேர்த்து எழுதிவிடுவாங்களே அது மாதிரி இறங்கிட்டாரு. ‘எம்.எல்.ஏக்கள் ஆளுநராக இருக்கக்கூடிய கவர்னரிடம் சென்று மனு கொடுத்தார்கள்’ன்னு முழங்கிகிட்டு இருக்காரு. அதுக்கு கைத்தட்டல் வேற பலமா இருக்கு. ஆனா அதையும் கரெக்டா கட் பண்ணி வீடியோவை ஷேர் பண்ணிவிட்ருக்காங்க..

வழக்கமா யாருக்காவது ட்ரோல் வீடியோ போடனும்னா அவங்க பேசுன வீடியோவோட காமெடி வீடியோ ஒண்ணை சேர்த்து எடிட் பண்ணி போடுவாங்க. ஆனா இவருக்கு மட்டும் தான் அவர் பேசுனதை மட்டும் எடுத்து போட்டாலே ட்ரோல் வீடியோ மாதிரி இருக்குன்னு கமெண்ட் பண்றாங்க. அப்டேட்டை பாருங்க.. வேறஎதுவும் வீடியோ வருதான்னு பார்த்துட்டு வாரேன்.

@Kozhiyaar

யாருக்கு ஓட்டு வைக்க என்பதை விட, யாருக்கு வேட்டு வைக்க வேண்டும் என்பதாகவே போகிறது இத்தேர்தல் களம்!!!

@RahimGazzali

சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளரை சீக்கிரம் அறிவிங்க. இல்லாட்டி கடுப்புல எச்.ராஜாவே அட்வான்ஸா காங்கிரஸ் வேட்பாளரையும் அறிவிச்சிடப்போறாரு?! ;)

@SubashiniBA

தமிழ்நாட்டில் இத்தனை கோடி கடன் இருக்கிறது அதை அடைப்பேன் என்று ஒரு கட்சியும் சொல்லவில்லை...

அனைத்து மாநில கட்சியும் இலவசம் ஒன்றே தேர்தல் அறிக்கையாக உள்ளது ....

@shivaas_twitz

முதலமைச்சரா இருக்குறது கூட பரவால்லை...

மாபெரும் தலைவர் மாதிரி அடுத்தவங்களுக்கு ஓட்டு கேட்டு வர்றத பார்த்தா தான்.

@RahimGazzali

இப்பவும் சிவகங்கை தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்காமல் சஸ்பென்ஸ் வச்சுட்டாங்கய்யா.... ஒருவேளை ராகுல் காந்தி போட்டியிடுவாரோ?!

@Ramesh46025635

"தண்ணி" போட்டு விட்டு..."கட்டிங்" போட ஆரம்பிக்கிறார்கள்..!!!

சலூன்கடைகாரர்கள்.

@mohanramko

யாரை நிராகரிக்க வேண்டுமென தெரிகிறது, ஆனால் யாரை தேர்ந்தெடுப்பது என்று தெரியவில்லை

1. வேட்பாளர்

2. மணப்பெண்

@sultan_Twitz

திமுக வெற்றி பெற்றால் ஒரு குடும்பம் மட்டுமே பயனடையும்! - எடப்பாடி பழனிசாமி #

எடப்பாடி: ஆமா அதிமுகவுக்கு ஓட்டு போடுங்க என் சம்பந்தி பயனடைவாரு..?!

@amuduarattai

மனைவியிடம், முறத்தால் அடிவாங்கி, தப்பி ஓடிய ஏதோ ஒரு கணவன் தான், "புலியை முறத்தால் விரட்டிய பெண்" என்ற கதையை உருவாக்கி இருக்கக்கூடும்.

@kumarfaculty

திமுக-காங்கிரஸ் ஜாதகத்தை பார்த்தேன்.

ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை -எச் ராஜா

எல்லோருடைய ஜாதகத்தையும் பார்த்துச் சொல்லிடுங்க தேர்தல் செலவாவது மிச்சமாகும்.

@gips_twitz

கவுண்டமணிட்ட இருந்து இளநீர உருவி வடிவேல் தனி கடை போட்ட மாதிரி காங்கிரஸ் கட்சில இருந்து காமராஜர் வல்லபாய்படேல் லால் பகதூர் சாஸ்திரி போன்ற தலைவர்கள உருவி எடுத்து ஏவாரம் பண்ணிட்டு இருக்கு பாஜக

@mohanramko

அமமுக-வில் இணைந்தார் டான்ஸ் மாஸ்டர் கலா..!

ஆட்டத்தை இனிமே பார்க்க தானே போறீங்க...

@HAJAMYDEENNKS

சர்க்கரை வியாதியும் பரம்பரை சொத்தில் சேர்ந்துவிட்டது பல குடும்பங்களில் !

@saravananucfc

பசங்க சின்ன வயசுல அப்பாவ ஹீரோவா பார்த்துட்டு பெரியவன் ஆனதும் வில்லனா பார்த்த பாவத்துக்கு தான் பொண்ணுங்க காதலிக்கும்போது பையன ஹீரோவா பார்த்துட்டு கல்யாணத்துக்கு அப்பறம் காமெடியனா பாக்குறாங்க போல.

@Annaiinpillai

இந்திய அளவில் மோடிக்கு செல்வாக்கு குறைந்த மாநிலம் 'தமிழ்நாடு' என கருத்துக்கணிப்பில் தகவல் - செய்தி # சோத்துலையும் அடி வாங்கியாச்சி சேத்துலையும் அடி வாங்கியாச்சி மொமென்ட்!?

@sultan_Twitz

பாடகர் மனோவை தொடர்ந்து அமமுக கட்சியில் இணைந்த நடன இயக்குநர் கலா - செய்தி #

அப்போ தேர்தல் பரப்புரையில் மனோ பாட, கலா ஆட ஒரே கூத்தா இருக்க போவுது..?

@amuduarattai

திருப்பூரை சிங்கப்பூராக உருவாக்கும் நோக்கம் அரசுக்கு உள்ளது. -கே.ஏ.செங்கோட்டையன்.#

இது சிங்கப்பூருக்கு தெரியாமல் பார்த்துக்கங்க.!

@manipmp

பொய்கள் மூன்று வகைப்படும்

1 பொய்

2 பச்சைப் பொய்

3 புள்ளி விபரங்கள்

-மார்க் ட்வைன்

@parveenyunus

திமுக-காங்கிரஸ் கூட்டணியின் ஜாதகத்தை பார்த்தேன்; அவர்கள் நாற்காலியில் உட்கார வாய்பில்லை-எச். ராஜா # இதை சாரணர் தேர்தலில் நிக்கறதுக்கு முன்னாடியும் பார்த்திருக்கலாமே..?

-லாக் ஆஃப்

சனி, 23 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon