மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 18 அக் 2019

நோக்கியா சீனாவுக்கு தகவல்களை அனுப்பியதா?

நோக்கியா சீனாவுக்கு தகவல்களை அனுப்பியதா?

நோக்கியா நிறுவனம் தயாரித்த மொபைல் போன்களிலிருந்து சீனாவுக்கு தகவல்கள் அனுப்பப்பட்டதாக அண்மையில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து இவ்விவகாரத்தில் விசாரணை நடத்தப்படும் என்று ஃபின்லாந்து நாட்டின் தகவல் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

நோக்கியா பிராண்ட் போன்களை பின்லாந்தை சேர்ந்த ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனம் தயாரித்து வருகிறது. தனிநபர் விவரங்கள் ஏதும் யாருக்கும் அனுப்பப்படவில்லை என்று இந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது. சில மொபைல்களில் மட்டும் தகவல் மென்பொருளில் கோளாறு ஏற்பட்டதாகவும், அக்கோளாறு உடனடியாக சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும் ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நோக்கியா 7 மொபைல் போன்களில் ஏற்பட்ட மென்பொருள் கோளாறால் சில முக்கிய தகவல்கள் சீனாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தொடர் புகார்கள் எழுந்துள்ளன. இவ்விவகாரத்தில் ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

நோக்கியா நிறுவனத்தின் மொபைல் போன்களிலிருந்து தனிநபர் விவரங்கள் மூன்றாம் நபருக்கு அனுப்பப்பட்டதா என்பது விசாரிக்கப்படும் எனவும், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஃபின்லாந்து நாட்டின் தகவல் பாதுகாப்பு விசாரணை அதிகாரி ரீஜோ ஆர்னியோ தெரிவித்துள்ளார்.

சனி, 23 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon