மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 மா 2019

வழக்கறிஞர் மீதான குற்ற வழக்கு: பார் கவுன்சில் தடை!

வழக்கறிஞர் மீதான குற்ற வழக்கு: பார் கவுன்சில் தடை!

குற்ற வழக்குகளை மறைத்து வழக்கறிஞராக பார் கவுன்சிலில் பதிவு செய்பவர் வழக்கறிஞராகப் பணியாற்றத் தடை விதித்து தமிழ்நாடு பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த சங்கர் என்பவர் பார் கவுன்சிலுக்கு மனு ஒன்றை அனுப்பியிருந்தர். அதில்,

சென்னை வடபழனியைச் சேர்ந்த வசந்த மூர்த்தி என்பவர் தன் மீதான குற்ற வழக்குகளை மறைத்து, 2018ஆம் ஆண்டு வழக்கறிஞராக பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ளதாகப் புகார் அளித்திருந்தார். அதன் மீது தமிழ்நாடு பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் சிங்காரவேலன் முன் விசாரணை நடத்தினார். அப்போது, ஆக்கிரமிப்பு தொடர்பான விவகாரத்தில் தன் மீது புகார் உள்நோக்கத்துடன் பார் கவுன்சிலில் புகார் அளித்திருக்கிறார் என்று வசந்த மூர்த்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது

இது குறித்து உத்தரவிட்ட பார் கவுன்சில்,

குற்றவழக்குகளை மறைத்து வழக்கறிஞராகப் பதிவு செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்தது. இதனால், வசந்த மூர்த்தி தன் மீதான குற்றவழக்குகளில் இருந்து விடுவிக்கப்படும் வரை அவரது வழக்கறிஞர் பதிவை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டது. இதனால், அவர் வழக்கறிஞராகப் பணியாற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 15 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon