மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 மா 2019

சமூக நீதிக்கு முன்னுரிமை: பாமக தேர்தல் அறிக்கை!

சமூக நீதிக்கு முன்னுரிமை: பாமக தேர்தல் அறிக்கை!

அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சி, வருகிற மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டிருக்கிறது.

இன்று (மார்ச் 15) சென்னையில் நடந்த நிகழ்வில் பாமகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டு, “தன்னாட்சி அதிகார பெற்ற தமிழகம் படைப்போம் என்பதே முதன் முழக்கம். மாநிலங்களின் உரிமையே மத்திய அரசின் பெருமை தன்னிறைவு பெற்ற தமிழகம், தமிழகமக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் ஆகியவற்றைப் பற்றி விரிவாக சொல்லியிருக்கிறோம். ஆய்ந்து அறிந்து யோசித்து இந்த கருத்துகளை வடிவமைத்திருக்கிறோம். இதில் இல்லா கருத்துகளை நீங்கள் சொன்னாலும் அதை வரவேற்கிறோம்” என்று தெரிவித்தார் .

சமூகப் பாதுகாப்புத் திட்டம் என்ற அடிப்படையில் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் குடும்பங்களுக்கு 2ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு வழங்க இந்த தேர்தல் அறிக்கை வலியுறுத்துகிறது. தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்ற பாமக பாடுபடுமென்றும் தேர்தல் அறிக்கை கூறுகிறது.

94 பக்கம் கொண்ட 36 தலைப்புகளில் அமைந்த இந்தத் தேர்தல் அறிக்கையில் பாமகவின் அடி நாதமான சமூக நீதி ஓங்கி ஒலிக்கிறது.

வெள்ளி, 15 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon