மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 மா 2019

ஜோதிகாவின் ராட்சசி!

ஜோதிகாவின் ராட்சசி!

காற்றின் மொழி திரைப்படத்தைத் தொடர்ந்து ஜோதிகா தான் அடுத்தடுத்து நடிக்கும் படங்களின் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

அறிமுக இயக்குநர் ராஜ் இயக்கும் புதிய படத்தில் ஜோதிகா அரசுப் பள்ளி ஆசிரியையாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ராட்சசி எனப் பெயரிடப்பட்டுள்ளது. அரசுப் பள்ளியின் கல்வித் தரம் உயர்வதற்குக் குரல் கொடுப்பவராக அவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது. ஜோதிகா இதற்கு முன்னதாக கௌதம் மேனன் இயக்கிய காக்க காக்க படத்தில் பள்ளி ஆசிரியையாக நடித்திருந்தார்.

எஸ்.ஆர்.பிரபு தனது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கும் இந்தப் படத்தில் பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பெரேடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்காக 50 லட்சம் ரூபாய் மதிப்பில் பள்ளிக்கூடம் போன்ற செட் அமைக்கப்பட்டுள்ளது. முக்கியமான காட்சிகள் இதில் படமாக்கப்படவுள்ளன.

ஜோதிகா தற்போது குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார். சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கும் இந்தப் படம் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாகிவருகிறது. ரேவதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

வெள்ளி, 15 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon